
பழைய தபாற்கந்தோர் வீதி, சங்கானையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூரணசற்குணம் இரத்தினராசா அவர்கள் 06.05.2022 அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலம் சென்ற பூரணசற்குணம் மற்றும் இராசமணி (கனடா) ஆகியோரின் அன்பு மகனும்,
மாதகல் மேற்கை சார்ந்த வசந்தலட்சுமியின் ஆருயிர் கணவரும், தாட்சாயினி, தனிசிகா (யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி), தருண் (யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ் சென்ற சோமசுந்தரம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகனும், நேசராசா(கனடா), தவராசா (நாதன்- அஞ்சல் அலுவலகம் சங்கானை), பவளராசா(கனடா), செந்தில் ராசா(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும், உதயராணி, தர்யினி, உதயகலா , ரஜிதா , சாந்தலட்சுமி , சத்தியசேகரன் (லண்டன்), ஜெயலட்சுமி மற்றும் காலஞ்சென்ற மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் அருண் , அஜன் , கஜிதரன், சுஜிதரன் , கேனுஜா , டிரோத ஆகியோரின் சிறிய தந்தையும் வித்தகன் , சாரங்கன் , பவிசன் , பாவனா சுவேதன் , மாதுளன் , ஆரண்யா , கயூரிகா ஆகியோரின் பெரிய தந்தையும், டிதுசன், ஜிதுர்சினியின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10.05.2022 (வெவாய்க்கிழமை) அன்று 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சங்கானை கராச்சி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
- குடும்பத்தினார்
பழைய தபாற்கந்தோர் வீதி சங்கானை
தொடர்பு - பூ தவராசா - சகோதரர் (0774308899)