ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களின் அனுசரணையுடன் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினூடாக மாதகல் கழகங்களிடையே நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடாத்துவதற்கு பண உதவி வழங்கியதற்கு நன்றி கூறல்..!

0 comments
















ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களின் அனுசரணையுடன் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினூடாக மாதகல் கழகங்களிடையே நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி (Mathagal premier league) 18/06 சனிக்கிழமை ஆரம்பமாகியது. இத் தொடரில் அரையிறுதிக்கு சென்தோமஸ் விளையாட்டுக் கழகம், விநாயகர் விளையாட்டு கழகம், பரிமளாகாந்திவிளையாட்டுக் கழகம், நியூஸ்ரார்  விளையாட்டுக்கழகம் தகுதி பெற்றன.
26.06.2022 அன்று நடைபெற்ற   இறுதி போட்டிக்கு  மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் எதிர் மாதகல் சென்தோமஸ்  விளையாட்டுக்கழகமும்  மோதின அதிலே முதலில் துடுப்பெடுத்தாடிய எமது அணியினர் 6 பந்து பரிமாற்றங்களில் 45/5 ஓட்டங்களை பெற்றது. அதனை துரத்திய சென்தோமஸ் அணியினர் தொடக்கத்தில் அதிரடியாக ஆரம்பித்து கடைசிவரை விறுவிறுப்பாக விளையாடினர் இறுதியில் எமது அணியினர் 11 ஓட்டங்களால் மாதகல் சம்பியனைத்  தட்டிச்சென்றது.
மாதகலில் 10 கழகங்கள் போட்டியில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.























































































Aucun commentaire:

Enregistrer un commentaire