பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் [2,50,000]ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு 13-04-2022 அன்று இடம்பெற்ற புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கௌரவிப்பு விழாவின்போது வழங்கியது.
இப் பணத்தினை மாதகலிற்கு விடுமுறையில் சென்றிருந்த எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு முருகேசு ஞானசீலன் [ஞானி] அவர்கள் விநாயகர் விளயாட்டுக் கழகத்தின் தலைவர், கணக்காளர் ஆகியோரிடம் வழங்கினார்.
மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்திற்கு காணிகள் வாங்க உதவி செய்தவர்களின் பெயர்கள் என்றும் நிலைத்து நிற்க "நிரந்தர பெயர்பலகை" அமைப்பதற்கும், மைதானப் புனரமைப்பிற்கும் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் [2,50,000]ரூபா நிதி உதவியினை எமது சங்கத்திடம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினூடாக கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டு இப்பணம் அனுப்பி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)