பிரான்ஸ் நாட்டில் MARLY LE ROI - 78160 நகரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களின், வருடாந்த நிகழ்வாக நடாத்தப்படும் (FÊTE DES ASSOCIATIONS) நிகழ்வில் 19ஆவது தடவையாக..!

0 comments
பிரான்ஸ் நாட்டில் MARLY LE ROI - 78160 நகரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களின்,  வருடாந்த நிகழ்வாக நடாத்தப்படும்  (FÊTE DES ASSOCIATIONS) நிகழ்வில் 19ஆவது தடவையாகவும்,  பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஞாயிறு 09-09-2023  அன்று பங்கு பற்றிய போது ....








பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்  சங்கத்தின் 19 ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி ஞாயிறு 02-07-2023 அன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5  மணியளவில்  நிறைவடைந்தது.
இந்த  நிகழ்வில் எமது சங்கத்தின் அங்கத்தவர்களும், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்களும்  விளையாட்டுப் போட்டிகளில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வினை  எமது சங்கத்தின் விளையாட்டு துறைப் பொறுப்பாளர் திரு ஞானசீலன்  டிலக்சன், உதவிப் பொறுப்பாளர்களான திரு இராசரத்தினம்  கோபிநாத்,  திருமதி மணிவண்ணன்   விஜயறாணி, செல்வி கொலின்ரன் தனு ஆகியோர்  திறம்பட நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஓட்டப்போட்டிகள், அஞ்சல் ஓட்டப்போட்டிகள்,  நீளம் பாய்தல், தட்டெறிதல், சாக்கோட்டம், உதைபந்தாட்டப்போட்டிகள்,  மற்றும் பல விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு, 18 வயதிற்கு  மேற்பட்ட அனைவரிற்கும் பரிசில்கள் உடனடியாகவே  வழங்கப்பட்டது. 
 
மர்லி லு றுவா (MARLY LE ROI-78160) நகரசபை  2ஆவது  தடவையாகவும், எமக்கு இலவசமாக  STADE DE CHENIL விளையாட்டு மைதானத்தினை  தந்தமைக்கு எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. 

இன்றைய நிகழ்விற்கு எமது சங்கத்தினை சேர்ந்த பலர் குளிர் பானங்கள், தேநீர், பலகார வகைகளை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரிற்கும் எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.


       இன்றைய நிகழ்வில் இதழ் TNTR முகநூலின் பொறுப்பாளர் கலந்து கொண்டதுடன்,  எமது சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, எதிர்கால செயற்பாடுகள் பற்றி, விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து நேரடி ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களிற்கு எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.































































Aucun commentaire:

Enregistrer un commentaire