பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக எமது கிராமத்தில் நடாத்தப்படும் பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தின் வேண்டுகோள்..:

0 comments
எமது கிராமத்து மக்களின் ஆலோசனைகள், எமது தலைமைச் சங்கத்தின் ஆலோசனைகளை கருத்தில் எடுத்து, பொன்னுத்துரை சிறுவர் நூலகம் ஒன்றினை  இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக எமது தலைமைச் சங்கக் கட்டிடத்தில் 08-02-2015அன்று முதல் நடாத்தி வருகின்றது. 

இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக, எமது சமூகத்தின் எதிர்கால சந்ததியினருக்காக, தூரநோக்கோடு கல்விக்கு முதலிடம் கொடுத்து, பரீட்சார்த்தமாக இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இதன் பயன்பாடு வெற்றியளிக்கும் பட்சத்தில் விரிவுபடுத்தி தொடர உள்ளோம்.

    இந்த நூலகத்தில்  பணிபுரிபவர் மாதகலில் அமைந்துள்ள சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள பாடசாலை, நுணசை பாடசாலை, சென் யோசப் மகா வித்தியாலயம் மற்றும் விக்னேஸ்வரா வித்தியாலயம்  ஆகிய பாடசாலைகளிற்கு சென்று புத்தகங்களை மாணவர்களிற்கு வழங்கி வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்து வருகின்றனர். 

                        அதேவேளை மாதகல் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த நூலகத்திற்கு சென்று பயன்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூலகத்தில்  இலத்திரனியல் வாசிப்பு பகுதியினை 09-03-2017 அன்று முதல் ஆரம்பித்துள்ளோம்.

மாதகல் கிராமத்தில் வசிக்கும் அனைவரும் இந்த நூலகத்தினை பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் பெறுமாறு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் வேண்டுகின்றது. 

இந்த நூலகத்தின் பயன்பாடுகள் பற்றிய கருத்துக்களை எமது சங்கத்தின்  mathagalafr@gmail.com   எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.



 

Aucun commentaire:

Enregistrer un commentaire