கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியில் மாதகல் நலன்புரிச்சங்கத்தின் அனுசரணையின் கீழ் நிதியுதவி வழங்கல்..!

0 comments
......
முன்பள்ளிக் கல்வி மேம்பாடு, கல்வி வாழ்வாதார மேம்பாடு மற்றும் மருத்துவ கட்டுமான வேலைகள் ஆகிய செயற்திட்டங்களுக்காக 19/03/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகல் நலன்புரிச்சங்க கட்டடத் தொகுதியில் நடைபெற்ற மாதகல் நலன்புரிச்சங்க நிர்வாக சந்திப்பில் வைத்து ரூ.782, 000.00(ஏழு இலட்சத்து எண்பத்திரண்டாயிரம் ரூபா) நிதி சம்மந்தப்பட்டவர்களுக்கு மாதகல் நலன்புரிச்சங்கத் தலைவர் திரு. வி சிற்றம்பலம், செயலாளர் திரு. மா ஜெறாட் ஆகியோரின் முன்னிலையில் மாதகல் நலன்புரிச்சங்க உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நிதி வழங்கப்பட்ட செயற்றிட்டங்கள்
...........................................................
01. மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி     ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு நிதி (2023, 2024)ம் ஆண்டுகளுக்கானது: ரூ.360, 000/=
02. தாய் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் வாழ்வாதார நிதியுதவி 02 பிள்ளைகள் தலா ரூ.36, 000/= வீதம் (2022ம் ஆண்டுக்கானது): ரூ.72, 000/=
03) பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கி அறை கட்டுமான வேலைக்கான கொடுப்பனவு: 350, 000/=
மொத்தமாக ரூ.782, 000(ஏழு இலட்சத்து எண்பத்து இரண்டாயிம் ரூபா) வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மாதகல் கிராமத்தினதும், மக்களினதும் மேம்பாடு கருதி கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தினரால் பல்வேறு  செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






 

Aucun commentaire:

Enregistrer un commentaire