மாதகல் பிரதேசத்தில் தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாடு மற்றும் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி கருதிய செயற்பாடுகளுக்கு கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றித்தால் நிதியுதவி வழங்கல்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு மனிதனின் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் கல்வியின் அவசியம் கருதியும், அக்கல்வியை வழங்குகின்ற பாடசாலைகளின் வளர்சி கருதியும் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தால் மாதகல் நலன்புரிச்சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா 352,000/- (மூன்று இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம்) உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்வு 05/05/2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:30 மணிக்கு மாதகல் நலன்புரிச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
எமது பிரதேசத்தில் தாய், தந்தையரை இழந்த 07 பிள்ளைகளின் கல்வி வாழ்வாதார செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டது
05 பிள்ளைகளுக்கு தலா 36. 000/- வீதமும்
02 பிள்ளைகளுக்கு தலா 30, 000/- வீதமுமாக
ரூபா 240.000( இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம்) மற்றும்
யா/மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலய பயிற்றுவிப்பாளர், உதவியாளர் கொடுப்பனவு மற்றும் தேசியமட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான கொடுப்பனவு ரூபா 112.000/- (ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரம்) வும் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியச் செயலாளர் திரு நா.சரவணன் அவர்களினால் உரியவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிதியானது உரியவர்களுக்கு வருடாந்தம் வழங்கும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான நிதி வழங்கலாகும். இந்நிதி வழங்கும் நிகழ்வில் மாதகல் நலன்புரிச்சங்கத் தலைவர் திரு வி.சிற்றம்பலம். செயலாளர் திரு. மா.ஜெறாட், பொருளாளர் திரு சி.ஞானபண்டிதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)