மாதகல் மேற்கு J/152கிராம அலுவலகம் அமைப்பதற்கான காணிச் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்..!

0 comments
மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே இக் காணியினை சுற்றி சுற்றுமதில் அமைக்கவேண்டி உள்ள தேவை உணர்ந்து மாதகல் துறைமுகத்தைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வசிப்பவருமாகிய திரு செல்லத்துரை.துரைரத்தினம் அவர்களால் தனது தயாராகிய அமரர் செல்லத்துரை.பரமேஸ்வரி(பரமேஸ்) அவர்களின் நினைவாக அவரது முதலாம் ஆண்டாகிய 15.05.2023 திட்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் J/152 கிராம அலுவலகக் காணியின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அவரது உறவினர்கள்,மாதகல் மேற்கு J/152 கிராம அலுவலர்ப.சுஜிபன், அபிவிருத்திஉத்தியோகத்தர்பி.அனுசிஜா,கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினர், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பு:-இதற்கான பூரண நிதிப்பங்களிப்பு திரு செல்லத்துரை .துரைரத்தினம் என்பதுடன் இவர் இக் காணிக் கொள்வனவிற்கும் நிதிப்பங்களிப்பு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















 

Aucun commentaire:

Enregistrer un commentaire