மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்களின் சேவைதனைப் பாராட்டி நன்றி நவிலல்..!

0 comments

மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவனும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் 08/05/2023 அன்று தான் கல்வி கற்ற பாடசாலைக்கு மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்குமுகமாக கரப்பந்தாட்டக் கம்பங்கள் வலைப்பந்தாட்ட கம்பங்கள் புனரமைப்பு, கம்பங்கள் நாட்டைவதற்கான செலவீனங்கள் அனைத்து சேவைகளையும் வழங்கி உதவியமைக்காக யா/மாதகல் நுணசை வித்தியாலய சமூகத்தினர் நன்றிகளை கூறிக்கொள்கின்றனர்.




மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் 08/05/2023 அன்று மாதகல் ஞானசிந்தாமணிப் பிள்ளையார் கோவிலுக்கு (வன்னியர் கோவில்) அருகில் அமைந்துள்ள அந்தியோட்டி மடப்புனரமைப்புக்கென ரூபா 100.000/-(ஒரு இலட்சம்)னை அன்பளிப்பாக ஞானசிந்தாமணிப் பிள்ளையார் கோவில் (வன்னியர் கோவில்) நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்துள்ளார்.இவருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றிகளை கூறிக்கொள்கின்றனர்.
 



Aucun commentaire:

Enregistrer un commentaire