மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும்,புலியூர் அந்தாதி நூல் வெளியீட்டு விழாவும் ..!

0 comments

மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும்,புலியூர் அந்தாதி நூல் வெளியீட்டு விழாவும் நிகழ்வானது மாதகல் கிழக்கு உப தபாற்கந்தோருக்கு அருகாமையிலிருந்து பாடசாலை மாணவர்களின் மேலைத்திய வாத்திய(பான்ட்)இசை முழங்க விருந்தினர்கள் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கிற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து விருந்தினர்களால் நிகழ்வின் சுடர் ஏற்றப்பட்டு பிரம்மஸ்ரீ ந.கஜநேசக்குருக்கள்
(ஐயப்பன் ஆலயம் மாதகல்),அருட்பணி செ.றோய் பேடினன் அடிகளார் (பங்குத்தந்தை மாதகல்) ஆகியோரின் இறையாசியுடன் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு சா.அருள்ஞானானந்தன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.























































































































































































































































மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 06/05/2023 சனிக்கிழமை அன்று கல்விக் கண்காட்சியும், ஆசிரியர் கௌரவிப்பும் நிகழ்வானது மாதகல் கிராமத்திற்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளின் மாணவர்களின் மேலைத்திய வாத்திய(பான்ட் ) இசை முழங்க விருந்தினர்கள் மாதகல் தபாற் கந்தோர் முன்றலிலிருந்து மாதகல் இளைஞர் மன்றக் கலையரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து விருந்தினர்களால் நிகழ்வின் சுடர் ஏற்றப்பட்டு பிரம்மஸ்ரீ செ.சுந்தரேஸ்வரசர்மா (ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம், மாதகல்), அருட்பணி செ.றோய் பேடினன் அடிகளார் (பங்குத்தந்தை, மாதகல்) ஆகியோரின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நிகழ்வாக விருந்தினர்களால் சிறுவர் சந்தை மற்றும் கல்விக் கண்காட்சி என்பன திறந்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட மாதகல் இளைஞர் மன்றக் கலையரங்கில் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு
சா.ஞானானந்தன் தலைமையில் தலைமை உரையுடன் கருமேகம் சூழ்கொண்டு கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்வியே எங்கள் உயிர்மூச்சு என பல சிரமங்களுக்கு மத்தியிலும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர் தொடர்ந்து விருந்தினர்கள் உரைகள் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து எமது கிராமத்திற்குட்பட்ட பாடசாலை, முன்பள்ளி அதிபர், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் எமது கிராமத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் முன்பள்ளிகளுக்கான நிதிக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது. மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டு இறுதியாக செயலாளர் திரு. மு.திருக்குமார் அவர்களினால் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.

































































































































































































மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 30 வது ஆண்டு நிறைவு விழா
எதிர்வரும் 07/05/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகல் அபிவிருத்திச் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவு விழாவும்,நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினர்


 

Aucun commentaire:

Enregistrer un commentaire