பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் மாதகல் சென் தோமஸ் பெண்கள் பாடசாலையில் ஒலி வாங்கித் தொகுதியினை அமைப்பதற்காக, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று இலட்சம்..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால்
மாதகல் சென் தோமஸ் பெண்கள் பாடசாலையில்  ஒலி வாங்கித் தொகுதியினை அமைப்பதற்காக, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட  மூன்று இலட்சம் [3,00,000]  ரூபாவினை செவ்வாய்க்கிழமை 27/06/2023 அன்று இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் வைத்து, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர் திரு தி. ஐங்கரன் அவர்களினால் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் ஆசிரியரிடம் வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு மா. ஜெறாட் அவர்களும், சங்கத்தின் உப செயலாளர் திரு யே. அனுஸ்டதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.


                      இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அங்கீகாரத்துடன், மாதகல்  மண்ணின் பாடசாலைகளிற்கு தேவைகளான கல்வி, பௌதீகவள அபிவிருத்திகளிற்குரிய  உதவிகளின் கீழ் இந்த நிதி பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் வழங்கப்பட்டது.






 

Aucun commentaire:

Enregistrer un commentaire