யா/மாதகல் சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவும் எதிர்வரும் 18.08.2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெருவிழா கொண்டாட்டமாக..

0 comments





யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவின் எழுச்சி வாரச் செயற்பாடுகளில் முதல் நாளான 12/08/2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்வுகளின் சில பதிவுகள்...

புதிய இருமாடிக் கட்டடத்திற்கு 08.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் பால் காச்சப்பட்டது.
தொடர்ந்து எமது பாதுகாவலர் தோமையாரின் திருச்சுபம் பங்குத்தந்தை வண றோய்பேடினன் அடிகளாரால் ஆசிர்வதிக்கப்பட்ட ஸ்தாபிக்கப்பட்டது.





























































யா/மாதகல் சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவும் எதிர்வரும் 18.08.2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெருவிழா கொண்டாட்டமாக பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள அதேவேளை தாய் மடியாக இருந்து கல்வியூட்டிய பாடசாலையின் பெருமைகளை வெளிக்கொணரும் வகையில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள், பாடசாலை சமூகத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து 12.08.2023 தொடக்கம் 18.08.3023 வரை எழுச்சி வாரச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர்.
நாம் எல்லோரும் ஒரே அணியாக அலை திரண்டு வந்து எமக்கு கல்வி ஆதாரம் வழங்கிய கல்வித் தாயின் பெருமைகளை பாரெங்கும் பறைசாற்ற அலை கடலென வாரீர் வாரீரென அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம் யா/ மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை







யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவினையும் முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்...
யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் புதிய இருமாடி கட்டிட திறப்பு விழாவினையும் முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் 22.07.2023 மற்றும் 23.07.2023 ஆகிய திகதிகளில் நடாத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகள் பழைய மாணவர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன
இதற்கமைய போட்டிகளில் பங்கு பற்றி 1ஆம்,2,ஆம்,3ஆம் நிலைகளைப் பெற்று பரிசுகளை பெறுவதற்கு தெரிவானோர் எதிர்வரும் 18.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்விற்கு சமூகமளித்து தங்களுக்கான பரிசில்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(ஆரம்பப் பிரிவு கட்டுரை போட்டி முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.)
நன்றி
பழையமாணவர் சங்கம்
யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலை

























யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவு விழாவையும்,புதிய கட்டிட திறப்பு விழாவினையும் முன்னிட்டு 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பழைய மாணவர் சங்கத்தால் முன்பள்ளி மாணவர்கள்,பாடசாலை மாணவர்களுக்கு கவிதைப் போட்டியும் மற்றும் இளையோர்க்கு சுடோக்குப் போட்டியும்,பெற்றோர்களுக்கான அலங்காரப் பொருளாக்கப் போட்டி என்பன நடாத்தப்பட்டன.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள்,இளையோர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். மேலும் எமது அழைப்பை ஏற்று வருகை தந்து நடுவர்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும் எமது மனப்பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை















































யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவு விழாவையும்,புதிய கட்டிட திறப்பு விழாவினையும் முன்னிட்டு 22.07.2023 சனிக்கிழமை அன்று பழைய மாணவர் சங்கத்தால் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட குழுநடனம், கட்டுரை,சித்திரம், ஆகிய போட்டிகளின் பதிவுகள்.
போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை












































போட்டியாளர்களுக்கான இறுதி நினைவூட்டல்..



போட்டிகளில் பங்கு பற்றும் முன்பள்ளி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், இளையோர், வளர்ந்தோர், பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட போட்டிகளுக்கான காலம், நேரம் ,இடம் ஒழுங்குகளில் எதிர்வரும் 22.07.2023 மற்றும் 23.07.2023 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நாளை, நாளை மறுதினம் ஆகிய தினங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதால் போட்டிகளுக்கு விண்ணப்பித்தோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.


முன்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான திகதி, நேரம் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடம்,விபரங்கள் என்பன மாணவர்களுக்கு உதவியாக இதன் கீழ் வெளிப்படுத்தப்பட்டுள்ளது இதற்கமைவாக மாணவர்களை தாயார் படுத்தி குறிப்பிட்ட திகதிகளில் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க பெற்றோர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். பழைய மாணவர் சங்கம் யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை




இப் போட்டியில் மாதகல் மண்ணின் முன்பள்ளிகளின் மாணவர்கள், பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் எமது கிராமத்தைச் சேர்ந்த வெளியிடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், இளையோர்கள், வளர்ந்தோர்களுக்கி டையேயும் பழைய மாணவர் சங்கத்தால் நடாத்தப்படவுள்ள போட்டிகளுக்கான திகதி, நேரம் மற்றும்
போட்டிகள் நடைபெறும் இடம்,விபரங்கள் என்பன போட்டியாளர்களுக்கு உதவியாக இதன் கீழ் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக போட்டியாளர்கள் குறிப்பிட்ட திகதிகளில் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு உரிய நேரத்திற்கு சமூகமளித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை



யா /மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழா மலருக்கான ஆக்கங்கள் கோரல்
மலருக்கான ஆக்கங்கள் விடயமாக முன்னர் தெரியப்படுத்தியிருந்த வகையில் இதுவரை ஆக்கங்களை சமர்ப்பிக்காதுள்ளவர்களின் நிலைமையினை கவனத்திற் கொண்டு ஆக்கங்களுக்கான இறுதித் திகதி 25.07. 2023 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள்,பாடசாலை சமூகத்தினர்,தமது ஆக்கங்களும் இம் மலரினில் இடம்பெற விரும்பின் 25.07.2023 ஆம் திகதிக்கு முன் தங்கள் ஆக்கங்களையும் தந்துதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
25.07. 2023 ஆம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்கள் இம்மலரில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
யா/மாதகல் சென் தோமஸ்
றோ.க பெண்கள் பாடசாலை




இப் போட்டியில் மாதகல் முன்பள்ளிகளின் மாணவர்கள், பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் எமது கிராமத்தைச் சேர்ந்த வெளியிடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பெற்றோர்கள்,மேலும் வளர்ந்தோர்களுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. ஆகவே இப்போடிகளின் விதிமுறைகளுக்கமைய நீங்களும் பங்கு பற்றி உங்கள் திறமைகளை வெளிக்கொணர அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
போட்டிகளின் விண்ணப்ப முடிவுத் திகதி 15.07.2023 ஆகையால் போட்டிகளில் நீங்களும் பங்குபற்றிக் கொள்ள எமது பாடசாலையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூரணப்படுத்திக் கொடுப்பதன் மூலம் போட்டிகளில் பங்குபற்றலாம்.
ஒரு போட்டியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்குபற்றவும் முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலை



போட்டிகளின் விண்ணப்ப முடிவுத் திகதியானது 07.07.2023 இல் இருந்து 10.07.2023 திகதிக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்தும் அதே வேளை போட்டிகளில் நீங்களும் பங்குபற்றிக் கொள்ள யா/ மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூரணப்படுத்திக் கொடுப்பதன் மூலம் போட்டிகளில் பங்குபற்றலாம்.
இளைஞர்கள், பெற்றோர்கள், மேலும் வளர்ந்தோர்களுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. ஆகவே இப்போட்டிகளின் விதிமுறைகளுக்கமைய நீங்களும் பங்கு பற்றி உங்கள் திறமைகளை வெளிக்கொணர அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஒரு போட்டியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்குபற்றவும் முடியும்.
மாதிரி விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுடோக்குப் போட்டிக்கான செய்முறைப்பயிற்சி விண்ணப்ப முடிவுத் திகதியின் பின்னர் போட்டியாளர்களுக்காக காணொளி வடிவில் செயல்முறையில் காண்பிக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
யா/ மாதகல் சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை




இப் போட்டியில் மாதகல் முன்பள்ளிகளின் மாணவர்கள், பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் எமது கிராமத்தைச் சேர்ந்த வெளியிடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பெற்றோர்கள்,மேலும் வளர்ந்தோர்களுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. ஆகவே இப்போடிகளின் விதிமுறைகளுக்கமைய நீங்களும் பங்கு பற்றி உங்கள் திறமைகளை வெளிக்கொணர அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

போட்டிகளின் விண்ணப்ப முடிவுத் திகதி 07.07.2023 ஆகையால் போட்டிகளில் நீங்களும் பங்குபற்றிக் கொள்ள யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று  பூரணப்படுத்திக் கொடுப்பதன் மூலம் போட்டிகளில் பங்குபற்றலாம்.

ஒரு போட்டியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்குபற்றவும் முடியும் என்பதனை தெரியப்பபுத்துகின்றோம்.

பழையமாணவர் சங்கம்

யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலை


யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மலர் வெளியீடு..










Aucun commentaire:

Enregistrer un commentaire