இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாதகல் நுணசை கந்த சாமி கோயில் பற்றி ஒரு You tube பார்த்தேன்
தீக்குளி வெட்டி உடுக்கு அடித்து அம்மன் பாடல் பாடியபடி ஒரு கூட்டம் கந்தசாமி கோயிலின் வாசலுக்கு வந்து பின்னர் முருகனை அழைத்துச் செல்வது போல அவனுக்கும் ஒரு உடுக்கடி பாடல் பாடி மீண்டும் தீக்குளி சென்று
விறகுக் கட்டைகளை அடுக்கி எரித்து தணல் ஆக்கி அதன் மேல் தீப்பாய்வதான ஒரு காட்சி
உடுக்கடியோடு காவடி பார்த்திருக்கின்றேன்
உடுக்கடியோடு கந்தன் பிரார்த்தனை இங்குதான் கண்டேன்
பண்டைக் காலத்தில் தமிழ் மக்கள் கந்தனை கடம்பன் என்று அழைத்து உடுக்கடித்து ஆடறுத்து அதன் ரத்தத்தை நெல்லில் கலந்து வழிபாடு பண்ணியிருக்கிறார்கள்
காலப்போக்கில் ஆரியமயமாக்கம்
அல்லது சமஸ்கிருத மயமாக்கம் அதனை மேவி விட்டது அல்லது அதுவும் இதுவும் கலந்து விட்டது என்று ஒரு கருத்தும் உண்டு
இந்தப் பின்னணியில் மாதகல் நுணசைக் கடம்பன் கோயில் அல்லது கந்தசாமி கோயில் பிரதானம் பெறுகிறது
ஒரு பக்கம் பிராமண பூஜை
இன்னொரு பக்கம் பூசாரிமார் பூசை
உயர்ந்த கோபுரம் கொண்ட முருகன் கோயில் ஒரு புறம்
தீக்குளி அமைக்கும் வயல்
மறுபுறம்
உடுக்கும் சத்தம் நிறைந்து உடலை அசைக்கும்அம்மன்
பாடல்கள் ஒருபுறம்
மேள நாதஸ்வர பின்னணியில் ஓதப்படும் வேத மந்திரங்களும் தேவாரங்களும் மறுபுறம்
உடுக்கடித்து அவர்கள் அம்மன் பாடல் மெட்டில் முருகனைப் பாடியது எனக்கு வியப்பூட்டியது
கந்தா என்று சொல்லாமல் கடம்பா ஏன்று பாடியனர்
ஒரே வளவில் இரண்டு பண்பாடுகளின் சங்கமம்
இந்தப் பண்பாட்டுச் சங்கமத்தின் பின்னணியில்
யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியின் வரலாறு பண்பாட்டுக் கலப்பு
சமூக உளவியல் என்பன. மங்கலாகப் புலனாகின
நல்லூர். மாவிட்ட புரம் செல்லச் சன்னிதி முருகன் கோயில்கள் பற்றியே நான் பெரிதும் அறிந்திருந்தேன்
நல்லூர் கந்தனை அலங்கார கந்தன் என்றும்
மாவிட்ட புர கந்தனை அன்னதான கந்தன்என்றும்
அழைப்பது வழக்கம்
இந்த நுணசைக் கந்தன் கோயிலில் காவடி வலு விசேஷம்
இதனால் மாதகல் நுண சைக் கந்தன் காவடிக் கந்தன் என அழைக்கப் படுகின்றான்
அங்கு கந்தன் கடம்பன என்ற பேரிலே அழைக்கப்படுகின்றான்
இந்த youtube ஐ நான் அயூரனுக்கும் இன்னும் பிறருக்கும் அனுப்பி அதைப்பற்றி வினவி இருந்தேன்
அந்தக் கோயிலைப் பற்றி மேலும் சில தகவல்களை அயூரன் கூறினார்
அது ஒரு கணிப்புக்குரிய கோயில் என்றும்
யாழ்ப்பாணப்பண்பாட்டு வரலாற்றின் இன்னொரு பக்கத்தைஅறிய ஆராயப்பட வேண்டிய கோயில் என்றும் எனக்கு புரிந்தது
இம்முறை எனது யாழ்ப்பாண விஜயத்தில் நேரே சென்று அதனைப் பார்க்க விரும்பினேன்
அங்கு சென்ற பின் மேலும் பல தெளிவுகள் கிடைத்தன
மாதகலில் மூன்று வகையான கோயில்கள் உள்ளன
1.கிறிஸ்தவ கோயில்கள்
2. பிராமணர் பூசை பண்ணும் கோயில்கள்
3. உள்ளூரார் பூஜை பண்ணும் கோயில்கள்
நுணசைக் கந்தன் கோயில் தேர் பிரசித்தம் ஆனது.
அதை நான் நேரில் பார்க்கவில்லை
ஆனால் அது பறாளை விநாயகர் கோயில் தேர் போல இருப்பதாக அறிந் தேன்
அத்தேரின் சிற்பங்கள் கஜூரோவா சிற்பங்களோடு
ஒத்தவை
பாலியல் சார்ந்தவை
இதே போல ஒரு தேர்தான் மட்டக்களப்பு கொக்கட்டி சோலை தோன்றீஸ்வரர் கோயிலிலும் இருந்தது
பறாளைத் தேர்
நுணசைக் தேர்
தான்தோன்றீஸ்வரர் தேர் ஆகிய இம்மூன்று தேர்களும் அவற்றில் உள்ள பாலியல் சன சிற்பங்களும் ஆய்வுக்குரியவை
ஒரு கால சிற்பக்கலைப் பண்பாட்டை எமக்கு உணர்த்துபவை
தேர் இழுத்தலும் தீப்பாய்தலும் ஒருங்கே நடைபெறும் இடம் இதுபோலவே தெரிகிறது
இப்படி இடம் இலங்கையில் எங்கும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
ஆரம்பத்தில் தீர்ப்பாய்தலிலிருந்து பின்னால் தேர் இழுத்தல் வந்திருக்கலாம் போலவும் தெரிகிறது
அது ஒரு பண்பாட்டு மாற்றமாகவும் இருக்கலாம்
இங்கு தேரை ஜாதி வேறுபாடு இன்றி அனைவரும் இழுக்கலாம் என்பதும் தீக்குளிப்பிலும் இது கடைப்பிடிக் கப் படுவதும் இன்னொரு முக்கிய செய்தியாக எனக்கு தெரிந்தது
கிறிஸ்தவ கோயில்கள் நடக்கும்போது இந்துக்கள் அதனை விழாவாகக் கொண்டாடுதலும்
கந்தசாமி கோயில் விழா நடக்கும்போது பூரண கும்பம் வைத்து கிறித்தவர்களே வரவேற்பதும் என ஒரு சமூக சமய ஒற்றுமையும் அங்கே காணப்படுகிறது
அந்தக் கோயில் சமூகவியலாளர்களாலும்
பண்பாட்டு ஆய்வாளர்களாலும்
வரலாற்று ஆய்வாளர்களாலும்
படிக்கப்பட வேண்டிய ஒரு கோயில் ஆகும்
மண்ணைத் தோண்டி அகழ்வாய்வு செய்து வரலாறு எழுதுவது போல
சமூகத்தைத் தோண்டி அவர்கள் உளத்தை அகழ்வாய்வு செய்து வரலாற்றைஎழுதுவது மிக அவசியமானது
கோயிலின் சூழல் மிக ரம்யமாக இருந்தது
. சூழ இருந்த வயல்
மிகப் பழைய கடம்ப மரம்
அதன் அருகே இருந்த குளம்
அதற்குள் இருந்த ஏழு குன்றுகள்
மாடுகள் வந்து தண்ணீர் குடிக்க தனியாக கட்டப்பட்ட குளம்
என் அது பல விடயங்களை உள்ளடக்கி இருந்தது
யாழ்ப்பாண பண்பாட்டை மேலும் புரிந்து கொள்ள ஆய்வு செய்ய வேண்டிய ஒரு பிடி தேசமாகவும் ஒரு கோயிலாகவும் எனக்கு அதுப்பட்டது
அதன் உரிமையாளர் வெளியே வந்தார்
அவரோடு
அளவளாவினேன்.
அடுத்த தடவை வந்து உற்சவத்தின் போது நின்று அவதானிப்பதாக கூறினேன்
உயிரோடு இருந்தால் வருவேன் என்றேன்
இருப்பீர்கள் கடம்பன் உங்களை அழைப்பர்
என்றார் அங்கு நின்ற ஒருத்தர்
இருட்டிவிட்டது. வரும் வழியில் பல கிறிஸ்தவ கோவில்களையும் அதன் சமூக பண்புகளையும் விளக்கிக் கொண்டு வந்தார் அயூரன்
மனம் எல்லாம் அந்தக் கோயில் சூழலும் அது பற்றிய கதைகளும் நிறைந்து போயிருந்தன.--Maunaguru Sinniah
மாதகல் நுணசை முருகமூர்த்தி பெருமானின் மகோற்சவகாலத்தினை சிறப்பிப்பதாக இக்கவி வெளியிடப்படுகிறது...........
"மாதகலோன் காவடியூரனே கந்தவேளே போற்றி !
மாசறுமருகனே மயிலோனே சிவமைந்தா போற்றி !
மாவின்கனியோனே மதிமுகனே மருகனே போற்றி !
மாமணியே காவடிப்பிரியனே கந்தனே போற்றி!
நுணசையில் மனமகிழும் மாதேவேன போற்றி !
நுதல்விழியார் மனம்விரும்பும்
காதலனே போற்றி !
கடம்பமலர் தாமரை குளிர்பொய்கை உடையோனே போற்றி !
கனிமாவும் காவடியும் மயிலும் விரும்புவோனே போற்றி !
சித்திரையில் தேரேறும் சித்திரவடிவேலா போற்றி !
சித்தம் முழுதும் நிறை சிங்காரஅழகா போற்றி !
வசந்தகால மலர்சொரியும் மணக்கும் கோவிலா போற்றி !
வள்ளி தெய்வயானையுடைய வள்ளலே போற்றி !
அடியார் வினையறுக்கும் வடிவேலுக்கும் போற்றி!
அண்ணலை சுமந்துதிரி அழகுமயிலுக்கும் போற்றி!
ஆயிரம் தொண்டுசெய் ஆர்வலர்க்கும் போற்றி !
ஆலயத்தில் வண்டாய்மொய்க்கும்
அடியோர்க்கும் போற்றி! போற்றி !!
.....நன்றி....
...மாதகல் மயூரன் ....
நுணசையம்பதி முருகா....
ஆர்ப்பரித்த அழகு எல்லாம்
உன் திருமுகத்தில் குழைந்து ஒழுக
முகாமிட்ட கோபம் தூவிய
உதடோர புன்முறுவலும்....
தயக்கம் என்னை வதைத்தெடுக்க வீழ்ந்து விடுவேனோ என்று
உன் நேர் கொண்ட
பார்வையின் கம்பீரத்தில்...
உன் பார்வைப்பொறிக்கணை தம்மீது
வீழ்ந்துவிடாதா என ஏங்கிகிடந்து...
கோடானகோடி வேண்டுதல்களை
ஒப்புவித்து ஏங்கி பரிதவித்த
ஓராயிரம் அப்பாவி அடியார்கள் சூழ...
வேல் வைத்து கொடியேற்றமாம்
உன் ஆட்டத்தை ஆரம்பிக்க
போட்ட பிள்ளையார் சுழி இன்று...
- Aara(Abiramy )-
மாதகல் போயின் சிறப்பினைத் தானறி/
மாதகல் நல்வளம் தானறி - மாதத்தில்/
மாதகல் நீலக் கடலையே நாடலாம்/
மாதகல் ஊரறிவாய் நீ/
(ஒரு விகற்ப நேரிசை வெண்பா)
அழகான கடல்வளம் நிலவளம்/
வழமையான வேளாண்மை மீன்பிடி/
நிறைவான பட்டறிஞர் படித்தறிஞர்/
முறையாக வழிகாட்டும் பெரியோர்/
சிறப்பாக வாழும் மக்கள்/
மறக்காமல் வழிபடக் கோவில்கள்/
வந்தாரை வரவேற்கும் ஊரவர்கள்/
வந்தாலே மாதகலுனை ஈர்க்கும்!/
(வரி/வசன கவிதை)Kasi Jeevalingam Yarlpavanan






