மாதகல் J/150 கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள சந்தியில் வீட்டுக் கழிவுப் பொருட்கள், சிறு பிள்ளைகளின் மலக்கழிவுப் பொருட்கள், சாராயப்போத்தில்கள் மற்றும் கிருமிகள் பரவக்கூடிய கழிவுப் பொருட்கள் கொட்டும் இடமாக உள்ளது. இவ் சந்தி அருகாமையில் J/150 கிராம சேவையாளர் அலுவலகமும், நலன்புரிச் சங்க அலுவலகமும், கல்வி அபிவிருத்திச் சங்கமும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றப் பக்கம் மில், கூட்டுறவுக் கடை, வைத்தியசாலையும் மற்ற பக்கம் விக்னேஸ்வரா பாடசாலை, சனசமூக நிலையம், பிள்ளையார் கோவிலும் உள்ளது. அருகில் இப்பாதையால் ஆயிரக்கணக்கான மக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இப்பாதையால் பயணிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கழிவுப் பொருட்கள் கொட்டுவதை தடை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விட்டுள்ளார்கள், சம்மந்தப்பட்ட அரச உத்தியோகத்தர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகள் அமைப்புகளே உங்கள் கவனத்திற்கு...
Inscription à :
Publier les commentaires (Atom)









