மாதகல் நுணசை முருகன் ஆன்மீக அறக்கட்டளை நிலையத்தால் 25.07.2023 செவ்வாய்கிழமை அன்று மாதகல் மேற்கைச் சேர்ந்த அமரர்களான வேலுப்பிள்ளை. பூபால சிங்கம், பூபாலசிங்கம் பாக்கியம் அவர்களின் 12ம் 13ம் ஆண்டு நினைவையொட்டி மாதகல் நுணசை முருகன் ஆலய முன்றலில் வைத்து அவர்களது மகன் திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களின் நிதியுதவியில் திரு சா. அருள்ஞானானந்தன் தலைமையில் மாதகல் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தினருக்கு தலா ரூபா 3200 (மூவாயிரத்து இருநூறு) பெறுமதியுடைய உலர் உணவுப் பொருட்களை நுணசை முருகன் ஆலய தர்மகத்தா, ஆலய குருக்கள்,
J/151, J/152 கிராம சேவையாளர்கள் திரு சுபாஸ், அனுசரணையாளர் திரு பூ. அன்பழகன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளிகள் கொடையாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இவரது இச்சேவைதனைப் பாராட்டி நன்றிகளை கூறி நிற்கின்றோம்..












































