மாதகல் சதாசகாய அன்னை ஆலயத்தில் தாத்தா,பாட்டிகள் தினம் 2023

0 comments

மாதகல் சதாசகாய அன்னை ஆலயத்தில் 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தாத்தா,பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்காக சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.தொடர்ந்து ஆலய பங்கு மக்களால் முதியவர்களுக்கு மலர் கொத்து கொடுத்து அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி கௌரவித்தார்கள். இதன் பின்னர் முதியவர்களின் அனுபவப் பகிர்வும் இறுதியாக முதியவர்களுடன் இணைந்து ஆலைய மக்கள் காலை உணவினை உண்டு மகிழ்ந்தனர்.
இந் நிகழ்வினை பங்குத்தந்தையின் வழிகாட்டலில் இளையோர்கள் மறையாசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் சிறுவர்களும் இணைந்து சிறப்பாக செயற்பட்டமைக்காகப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
பங்குத்தந்தையும்,இளைஞர் கழகமும்
சதாசகாய அன்னை ஆலயம் மாதகல்



























































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire