இந்நிகழ்வுகள் சமூக அபிவிருத்தி சங்க கட்டடத்தில் தலைவர் மாதகல் பங்குத்தந்தை அருட்பணி. றோய்பேடினன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், ஒரு வருட காலமாக மருத்துவ நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவைகள் தொடர்பான நிலவர அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ சேவைக்கான முழுமையான நிதிப்பங்களிப்பை செய்து வரும் திரு. ஏனோக் அன்ரன் அவர்களின் உயரிய உதவிகளுக்கு மதிப்பளித்து மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் மாதகல் மக்கள் சார்பில் பாராட்டுப் பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மருத்துவசேவை நிலையத்தின்மருத்துவர் J. துஜிபன், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. அருள்ஞானாந்தன், மாதகல் J/ 151 கிராம அலுவலர் திரு. விக்னபவன், மாதகல் பிரதேச சுகாதாரப் பரிசோதகர், சங்க உறுப்பினர்கள், சமூக நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)