பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் 04-06-2023 அன்று எடுக்கப்பட்ட முடிவின்படி, மாங்குளம் "உயிரிழை" முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பிற்கு போரினால் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோரின் செலவுகளிற்கென மூன்று இலட்சத்து இருபத்திரண்டாயிரத்து முந்நூற்று பதினாறு ரூபா 90சதங்களை [322,316,90] 2023ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் வங்கி மூலம் அனுப்பி வைத்தது.
இவர்களின் பராமரிப்பில் உள்ள போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு எமது சங்கமும் ஓர் சிறிய உதவியினை செய்வதில் பூரண திருப்தியடைகின்றது.
எமது சங்கம் அனுப்பிய பணம் பெற்றதை உறுதிப்படுத்திய கடிதமும், செலவு செய்த விபரங்களும் 04-07-023 அன்று கிடைத்தன. மிகுதிப் பணமான 20,346ரூபா90சதத்திற்குரிய செலவு விபரங்கள் பின்னர் தரப்படும் என உறுதியளித்துள்ளனர்.
எமது சங்கத்தினை சேர்ந்த கணக்காளர் திரு வி. குகனேஸ்வரன் அவர்களும், கலை, கலாச்சாரப் பொறுப்பாளர் திரு த. நந்தகுமார், அங்கத்தவர் திரு கு. விதுரன் ஆகியோர் வைகாசி 2023இல் தங்களின் நிறுவனத்திற்கு நேரடியாக வந்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)