மாதகல் மேற்கு J/152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள"கனால் வாய்க்கால்" 700m பகுதி 06.09.2023 புதன்கிழமை அன்று..!

0 comments

மாதகல் மேற்கு J/152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள"கனால் வாய்க்கால்" 700m பகுதி 06.09.2023 புதன்கிழமை அன்று பொது மக்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர் பங்களிப்புடன் துப்பரவு செய்யப்பட்டது.








மாதகல் விவசாய சம்மேளன காலபோகக் கூட்டம் 05.09.2023 செவ்வாய்க்கழமை காலை 10 மணிக்கு விவசாய போதனாசிரியர், பெரும்போக உத்தியோகத்தர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், சம்மேளன நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் மாதகல் ப.நோ. கூ சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் விதைப்பு திகதி, அறுவடை திகதி மற்றும் பிடிகாரர், வட்டவிதானை நியமனமும் இடம்பெற்றது.








02/09/2023 வெள்ளிக்கிழமை அன்று மாதகல் தெற்கு J/151 பிரிவில் உள்ள "பாணாகவெட்டி குள வாய்க்காய்கால்" ஒரு பகுதி துப்பரவு செய்யப்பட்டது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றினர்












01.09.2023 வியாழக்கிழமை அன்று மாதகல் மேற்கு j/152 பிரிவில் பொதுமக்கள் மற்றும் கிராமமட்ட உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் "நுணசை குளம்" துப்பரவு செய்யப்பட்டது.














31.08.2023 புதன்கிழமை அன்று மாதகல் கிழக்கு j/150 பிரிவில் பொதுமக்கள் மற்றும் கிராமமட்ட உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் "புதுக்குளம் வாய்க்கால்" துப்பரவு செய்யப்பட்டது..







மாதகல் மேற்கில் பரவிய தீ ஆனது மாதகல் மேற்கு ஜே/152 கிராம சேவையாளர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் அணைக்கப்பட்டுள்ளது.
27.08.2023 அன்று J/152, மாதகல் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தரவையில் பரவிய தீயானது தொடர்ந்து (28.08.2023)அன்றும்  பரவிய நிலையில் மாதகல் மேற்கு ஜே/152 கிராம சேவையாளர் துரிதமாக செயற்பட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து விரைந்து செயல்ப்பட்ட பிரதேச செயலக அதிகாரிகள் மானிப்பாய் பிரதேச சபை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து விரைந்து நடவடிக்கையில் இறங்கிய பிரதேச சபையினர் நீர்த் தாங்கிகளை வரவழைத்து பண்டத்தரிப்பு பட்டின சபை & பொது மக்கள் மற்றும் பண்டத்தரிப்பு கிராம உப அலுவலகத்தினருடன் இணைந்து மாலை தீயைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அணைத்துள்ளனர்.
இவ்வனர்த்த வேளையில் துரிதமாக செயல்ப்பட்ட அனைவருக்கும் மாதகல் மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.







 

Aucun commentaire:

Enregistrer un commentaire