மாதகல் கிராமத்தை உள்ளடக்கிய வறுமைக்குட்பட்ட10 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல்..!

0 comments
அமரர் செல்லதுரை ஆனந்தராஜா அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது மனைவி திருமதி சந்திரமதி மற்றும் பிள்ளைகள் மாதகல் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10 குடும்பங்களுக்கு தலா 10,000/= பெறுமதியான உலர் உணவுகளை வழங்குவதற்காக மக்கள் வாழ உதவும் நிறுவக மாதகல்க் கிளைக்கு ரூபா 100,000/=( ஒரு இலட்சம்) வழங்கப்பட்டு குறித்த செயற்பாடுகளை மாதகல் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுப்பதற்காக மக்கள் வாழ உதவும் நிறுவக மாதகல்க் கிளையூடாக ஒழுங்குபடுத்தப்பட்டதற்கமைய குறித்த நிகழ்வு 04.11. 2023 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04 மணிக்கு மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் சங்கத்தின் உப தலைவர் திரு தி.ஐங்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தொடர்ந்து உதவி பெறும் குடும்பங்களுக்கு இவ் உதவி தொடர்பான விடயங்கள் உபதலைவர் திரு தி.ஐங்கரன் மற்றும் செயலாளர் திரு மா.ஜெறாட் ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டதுடன் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் மாதகல் குறிச்சிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு தலா ரூபா 10,000/= (பத்தாயிரம்) பெறுமதியான உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதியாக உபசெயலாளர் திரு யே.அனுஸ்டதாஸ் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






 

Aucun commentaire:

Enregistrer un commentaire