மாதகல் மேற்கை பூர்வீகமாகக்கொண்டவரும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.பூ.அன்பழகன் அவர்கள் மாதகல் கிராமிய சுகாதார நிலையத்தில் ஆயுர்வேத வைத்தியர்களால் நடாத்தப்படுகின்ற நடமாடும் மருத்துவ சேவைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களான இரத்த அழுத்தம் அளவிடும் கருவி மற்றும் இரத்தத்தின் சர்க்கரை அளவினை கணிப்பிடும் கருவியினை அங்கு பணிபுரியும் ஆயுர்வேத, சித்த வைத்தியரான திருமதி.வி.வனிதா அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கினார். பின்பு மேற்படி உபகரணங்கள் மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் 06.11.2019அன்று ஒப்படைக்கப்பட்டன. இவரது சேவையை மென்மேலும் தொடர மாதகல்மக்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.
Inscription à :
Publier les commentaires (Atom)





