சனிக்கிழமை 05-09-2020 அன்று Marly le Roi நகரத்தில் நடைபெற்ற Fête d'associations நிகழ்வில் 16ஆவது தடவையாகவும் எமது சங்கம் பங்குபற்றியது. அன்றய தினம் எமது சங்கத்தின் சார்பில் இரண்டு நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்குபற்றிய செல்வி அபிரா, அட்சயா, திவ்வியா ஆகியோரின் நடனங்கள் இடம் பெற்றன. அதேவேளை செல்வன் அஸ்வின், செல்வன் சாய்சரன் ஆகியோரும் இந்த நடன நிகழ்வில் எதிர்பாராத வகையில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு எமது சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அதேவேளை Marly le Roi நகரசபையின் அதிபர் M. Jean-Yves PERROT அவர்களும், சங்கங்களின் பொறுப்பாளர் Mme Emmanuelle RAMPAZZO அவர்களும் எமது சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி எமது சங்கத்தின் தலைவர் திருமதி றஜிதாறானி, கணக்காளர் திரு குகனேஸ்வரன், செயலாளர் குகரவீந்திரநாதன் ஆகியோருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.






















