யாழ். மாதகல் கஞ்சா மீட்பு தொடர்பில் இருவர் கைது
Saturday, June 13, 2020 46 கிலோ கஞ்சா உட்பட 104 கி.கி. கஞ்சா மீட்பு
யாழ். மாதகல், குசுமந்துறையில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா தொடர்பில் சந்தேகநபர்கள் இருவருடன், மேலும் 46 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 104 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
யாழ். குசுமந்துறை கடற்கரை பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கை கடற்படையினரால் நேற்று (12) மேற்கொள்ளப்பட்டபோது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட ஒருதொகை கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடற்படையினர் வழக்கமாக மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கு அமைய, நேற்றையதினம், வடக்கு கட்டளை பிரிவின் கடற்படையினரால், யாழ். குசுமந்துறை கடற்கரையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவ்வேளையில், கரையை நோக்கி வந்த டிங்கிப் படகிலிருந்தவர்களால், மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில், ஏதோவொரு பொருள் கரைக்கு கொண்டு வரப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அவதானித்ததை தொடர்ந்து, குறித்த பகுதிக்கு கடற்படையினர் ரோந்து சென்றபோது, சில மூட்டைகள் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டமையை அவதானித்துள்ளனர். அத்தோடு, டிங்கி படகிலிருந்தவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது, குறித்த மூட்டைகளில் 25 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 57 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ள படகு மற்றும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்தனர். இதன்போது, குறித்த டிங்கி படகுடன் சந்தேகநபர்கள் இருவர் மாதகல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேகநபர்களிடம் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்டையில், கடற்பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த மேலும் 13 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில், 46 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுமார் 104 கிலோகிராம் கேரள கஞ்சா, டிங்கி படகுடன் சந்தேநபர்கள் இருவர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். மாதகல், குசுமந்துறை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட ஒருதொகை கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடற்படையினர் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறானதொரு தேடுதல் நடவடிக்கை, இன்று (12) வடக்கு கட்டளை பிரிவின் கடற்படையினரால், யாழ். குசுமந்துறை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது.
அவ்வேளையில், கரையை நோக்கி வந்த டிங்கிப் படகிலிருந்தவர்களால், மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில், ஏதோவொரு பொருள் கரைக்கு கொண்டு வரப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு கடற்படையினர் சென்றபோது, மூட்டைகள் சில கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டதை அவதானித்துள்ளனர். அத்தோடு, குறித்த டிங்கி படகிலிருந்தவர்கள், மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்குச் சென்று குறித்த மூட்டைகளை சோதனையிட்டபோது, குறித்த மூட்டைகளில் 25 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 57 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களை தேடி குறித்த கடற்பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கையை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். thinakaran.lk
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 105 கி.கி. கஞ்சா மீட்பு..
யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 105 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (11) காலை, மாதகல் கடற்பரப்பில் வைத்து படகொன்றில் வைத்து குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் பயணித்த மீனவர்கள், தப்பித்துள்ள நிலையில், படகின் உரிமையாளர் கடற்படையினரால் தேடப்படுகின்றார்.
படகுடன் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என, கடற்படையினர் தெரிவித்தனர்.(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன் thinakaran.lk )
யாழ். மாதகல் பகுதியில் சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான 14.35 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இக்கைது நேற்று (Saturday, February 14, 2020) இடம்பெற்றுள்ளது.
மாதகல் கடல் பகுதியில் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான டிங்கிப் படகொன்றை அவதானித்து வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது படகிலிருந்து தங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதோடு, படகிலிருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் மற்றும் டிங்கிப் படகு மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் யாழ். காங்கேசன்துறைக் கடற்பகுதியில் கடற்படையினர் இருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி இரண்டு கோடி ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று (06) பிற்பகல் சந்தேகத்திற்கிடமான படகொன்று நடமாடுவதாக கடரப்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த படகை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். இதன் போது குறித்த படகில் இரு பொதிகளில் மறைத்து வைக்கப்ட்டிருந்த தலா 100 கிராம் கொண்ட 37 தங்க பிஸ்கட்டுகள் மீட்கபட்டுள்ளதுடன், குறித்த தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள், சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட படகு என்பன யாழ். தெல்லிப்பழையிலுள்ள சுங்கத் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.(செல்வநாயகம் ரவிசாந்)
இந் நிகழ்வில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலதிக யாழ் மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி. மஞ்சுளாதேவி சதீஸன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பளர் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 48 வீடுகளில் 21 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு எழுவைதீவு, அனலைதீவு மற்றும் ஊர்காவற்றுறை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. மாதகல் காஞ்சிபுரம் வீதி (2,200 மீற்றர்கள்) 20 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதியால் மக்கள் மயப்படுத்தப்பட்டது.
யாழ். மாதகல் பகுதியில் ஆமை இறைச்சியுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இன்று (09) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ஆமை இறைச்சியுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். வட கடற்படை கட்டளைப் பிரிவினரும் இளவாலை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 38.8 கிலோகிராம் ஆமை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாதகல் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்டுள்ள ஆமை இறைச்சியுடன் சந்தேகநபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் ஒருவர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாதகல் பகுதியில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். கடல் வழியாக இவர் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டதாகவும், தெரியவந்துள்ளது. இச்சந்தேகநபரிடமிருந்து 3,650 ரூபா பெறுமதியான இந்திய நாணயத்தாள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்டுள்ள இந்திய நாணயத்தாள் மற்றும் கையடக்கத் தொலைபேசியுடன், சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாதகல் பகுதியில் 122.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இளவாலை பொலிஸ் அதிகாரிகளுடன் கடற்படையினர் இணைந்து நேற்று (31) தேடுதல் நடத்தியபோதே, பற்றையொன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் வழியாக குறித்த கேரள கஞ்சா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என, கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். மாதகல் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்தோடு, இச்சந்தேகநபர்களிடமிருந்து 64 கிராம் கேரள கஞ்சாவையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் இளவாலை பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நடத்திய சோதனையின்போது, இச்சந்தேகநபர்கள் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் 03 மகன்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 50, 27, 26, 22 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேகநபர்களிடம் இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (17) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்படவிருந்த நிலையில் குறித்த தங்கபிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் குறித்த தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்திச் செல்வதற்குத் தயாராகவிருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறைக் கடலில் கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட வெற்று உரப்பைகளிலிருந்து குறித்த தங்க பிஸ்கட்டுகளைத் தாம் மீட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஐந்து கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களை யாழ். தெல்லிப்பழையிலுல்ள இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.சம்பவத்துடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான இருவரும் யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.(செல்வநாயகம் ரவிசாந், புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
ஒரு தலைக்காதல் தோல்வியின் காரணமாக இளைஞர் ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
மாதகல் நாவலடி பகுதியில் இன்று இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விபரீத முடிவு எடுத்துத் தற்கொலை செய்துள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் தனது காதலை தெரிவித்த போது, அந்தப் பெண் இவரது காதலை ஏற்க மறுத்ததன் காரணமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
தற்கொலை சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.