அமரர் விஷ்வலிங்கம் பாலசுப்பிரமணியம் - யாழ். மாதகலை சேர்ந்த அமரர் விஷ்வலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு..!

0 comments
யாழ். மாதகலை சேர்ந்த அமரர் விஷ்வலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு, சுவிற்சர்லாந்து, (Ostermundigen) ஒஸ்டெர்முந்திஜெனில் வசிக்கும் அவரது மகன் வைத்திய கலாநிதி பாலசுப்பிரமணியம் விஜயதீபன் அவர்கள், எமது தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம் மூலம், கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு சக்தி மகளிர் இல்ல சிறுமிகளுக்கு இன்று 05-11-2020 இல் புண்ணியதானமாக விசேட மதிய உணவை வழங்கி இருந்தார்கள். வைத்திய கலாநிதி பாலசுப்பிரமணியம் விஜயதீபன் அவர்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
கொக்கட்டிச்சோலை சக்தி மகளிர் சிறுவர் இல்லத்தில் இன்று நடைபெற்ற விசேட உணவுடன் சுகாதார பழக்கவழக்கங்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறுவர் இல்லத்துக்கு சுகாதார பொருட்களும் வழங்கப்பட்டது. இச் சிறுவர் இல்லமானது பெண்களை கொண்டதாகும் எனவே இப்பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்றும் இதனை தந்துதவிய வைத்தியகலாநிதி பாலசுப்பிரமணியம் விஜயதீபன் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.( *இந்த விசேட உணவை வழங்க ஒழுங்கமைத்து தந்த மட்டக்களப்பு, ( Lift ) லிவ்ற் நிறுவனத்தாருக்கு நெதர்லாந்து தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்)



- அமரர் விஷ்வலிங்கம் பாலசுப்பிரமணியம் - யாழ். மாதகலை சேர்ந்த அமரர் விஷ்வலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு, சுவிற்சர்லாந்து, (Zurich) சூரிச்ல் வசிக்கும் அவரது மகன் திரு பாலசுப்ரமணியம் பிரதீபன் அவர்கள், எமது தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம் மூலம், மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி மகளிர் இல்ல சிறுமிகளுக்கு இன்று 05-11-2020 இல் புண்ணியதானமாக விசேட மதிய உணவை வழங்கி இருந்தார்கள். திரு பாலசுப்ரமணியம் பிரதீபன் அவர்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி மகளிர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஒரு நாள் விசேட உணவுடன் சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்த சுகாதார பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த இல்லம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் பிள்ளைகளைக் கொண்டதாகும். ஊர் மக்களின் நிதியுதவி உடனே தான் இயங்கி வருகிறது என்றும் திரு பாலசுப்ரமணியம் பிரதீபன் அவர்களால் இன்று வழங்கப்பட்ட உதவியானது மிகவும் முக்கியமானது என்றும் அவருக்கு தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு அவர்களின் பெற்றோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள் ( *இந்த விசேட உணவை வழங்க ஒழுங்கமைத்து தந்த மட்டக்களப்பு, ( Lift ) லிவ்ற் நிறுவனத்தாருக்கு நெதர்லாந்து தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்)



- அமரர் விஷ்வலிங்கம் பாலசுப்பிரமணியம் - யாழ். மாதகலை சேர்ந்த அமரர் விஷ்வலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு, (UK) பெரிய பிருத்தானியா, (Birmingham) பெர்மிங்கஹமில் வசிக்கும் அவரது மகள் திருமதி திலகதீபா ஜனதீபன் அவர்கள், எமது தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம் மூலம், மட்டக்களப்பு, பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு இன்று 05-11-2020 இல் புண்ணியதானமாக விசேட மதிய உணவை வழங்கி இருந்தார்கள். திருமதி திலகதீபா ஜனதீபன் அவர்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். மட்டக்களப்பு பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்லத்தில் இன்று வழங்கப்பட்ட விசேட உணவுடன் சுகாதார பழக்க வழக்கத்திற்கு ஏற்ற சுகாதாரப் பொருட்களும் கையளிக்கப்பட்டது. சிறுவர் இல்லம் ஆனது ஆண் பிள்ளைகளை மட்டும் கொண்ட ஒரு சிறுவர் இல்லமாகும். இதற்கு நிதியுதவி மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. திருமதி திலகதீபா ஜனதீபன் அவர்களால் இன்று வழங்கப்பட்ட சுகாதார பொருட்கள் இக்கால கட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவிப்பதோடு அவர்களின் பெற்றோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்ததாகவும் தெரிவித்தார்கள். ( *இந்த விசேட உணவை வழங்க ஒழுங்கமைத்து தந்த மட்டக்களப்பு, ( Lift ) லிவ்ற் நிறுவனத்தாருக்கு நெதர்லாந்து தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.)






Aucun commentaire:

Enregistrer un commentaire