திருமதி.மகேஸ்வரி சிவசிதம்பரம் (மகேஸ் அக்கா)

0 comments

...::சாவு அறிவித்தல் ::...

யாழ்.மாதகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா சமளங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசிதம்பரம் அவர்கள் 14.11.2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சிவசிதம்பரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மங்கையற்கரசியின் அன்புச் சகோதரியும், லோகேஸ்வரி, நற்றவமலர், நாகேஸ்வரி (ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் வவுனியா தெற்குக் கல்வி வலயம்) தவவிக்னேஸ்வரி, காலஞ்சென்ற சிவஞானேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சர்வேஸ்வரி (ஆசிரியை, வவுனியா இந்துக் கல்லூரி), சிவபாதமலர் (நந்தினி) ஆகியோரின் அன்புத் தாயாரும், சோமசுந்தரம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மாணிக்கவாசகம் (பத்திரிகையாளர்), இராமலிங்கம், காலஞ்சென்ற கந்தையா, சண்முகமாதேவன், காலஞ்சென்ற இராசன் எலமன்ற், வினோசிறி (ஆலயக் கட்டட நிர்மாணி) ஆகியோரின் அன்பு மாமியாரும், அருட்சுகந்தன் - மாதினி, சயந்தினி - தில்லை முருகதாஸ்,  பிரணவன் - விஜிதா, ராகுலன் - அனுசியா, பவித்ரா – தினேசன் (வைத்தியர் வவுனியா பொது வைத்தியசாலை), ஜமுனா பாஸ்கர் - தயாநிதி, காயத்ரி – எல்வின், சோபனா – கேசவன், நிஷோபன், தனோஜன் (NTB வங்கி, வவுனியா), நிரோசன், நிலக்சன் (மொபிடெல், வவுனியா), சஹானா, ஷாரங்கா, சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார். 

அன்னாரின் ஈமக்கிரியைகள் 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக உடல் சமளங்குளம் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி மாணிக்கவாசகம் 0774322811

சர்வேஸ்வரி எலமன்ற் 0776034691

வினோசிறி 0776686372



Aucun commentaire:

Enregistrer un commentaire