மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின்..!

0 comments

 இன்று மாதகலில் மட்டுமன்றி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக்கழகங்களில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி விளையாட்டுக் கழகமாக மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் இருக்கின்றது. இவ்வாறன எமது கழகமானது 1990 ஆம் ஆண்டளவில் அன்றைய இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சியினால் எமது கழகம் விநாயகர் விளையாட்டுக் கழகம் என்ற பெயரிலே தோற்றம் பெற்றது. அன்று தொட்டு இன்று வரை அதே விநாயகர் விளையாட்டுக் கழகம் என்ற அடையாளத்துடன் பல பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு இன்றும் மாதகலில் முன்னணி விளையாட்டுக் கழகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எமது கழகமானது ஆரம்ப காலத்தில் (1996 ஆம் ஆண்டளவில்) சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிலே JD/VSW/290 என்ற பதிவிலக்கத்தில் எமது கழகத்தினை பதிவு செய்து கொண்டோம். அதற்கடுத்ததாக, 2016 ஆம் ஆண்டளவில் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் NP /JAF /SAN /03 எனும் பதிவிலக்கத்தில் எமது கழகத்தினை பதிவு செய்துள்ளோம். எமது கழகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட இயங்கு நிலை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அவர்கள் காஞ்சிபுரம், மேற்கு மாதகல், மாதகல் கிழக்கு, மாதவன் கடவை, சூழானை, மாதகல் வடக்கு போன்ற அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.





கழகத்தின் இலட்ச்சினைகழகத்தின் கொடி
கழகத்தின் மகுட வாசகம்

கிரிக்கட், கரப்பந்து மற்றும் பூப்பந்து போன்ற வெளியக விளையாட்டுகளிலும், செஸ், கரம் போன்ற உள்ளக விளையாட்டுக்களிலும் எமது வீரர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.  எமது கழக செயற்பாடுகள் சிறந்த ஆரோக்கிய விளையாட்டு வீரர்களை உருவாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாது, சமூகத்திற்கு தேவைப்படுகின்ற சேவைகளையும் விழிப்புணர்வுகளை கடந்த காலங்களில் மேற்கொண்டு வருகின்றோம்.

ஆரம்ப காலங்களில் பல்வேறு இடர்பாடுகளிற்கு மத்தியில் தற்காலிக மைதானங்களில் பயிற்சியினை மேற்கொண்ட எமக்கு புதிய விளையாட்டு மைதானமானது பிரான்ஸ் மாதகல் நலன் புரி சங்கம், கனடா மாதகல் நலன்புரி ஒன்றியம், லண்டன் மாதகல் நலன் புரி சங்கம், சுவிஸ் மாதகல் நலன் புரி சங்கம், மற்றும் எமது கழக நலன்விரும்பிகள், பழைய அங்கத்தவர்கள், மாதகல் மக்களின் உதவியுடன் புதிய மைதானமானது 2015 ஆம் ஆண்டிலிருந்து அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அரச மற்றும் மாதகல் நலன்புரி சங்ககளின் நிதி உதவியுடன் உள்ளக விளையாட்டு அரங்கக்கானது கட்டப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஐந்து வருடங்களினுள் எமது மைதான மற்றும் கட்டிட வேலைகள் நிறைவு பெற்று முழுமையான மைதானம் உருவாக்கப்படும்.

1998ம் ஆண்டு தேர்வுசெய்யபட்ட நிர்வாகசபை உறுபினர்களின் முயற்சியினால் அவ்வாண்டே வடக்கு-கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களகத்தின் அங்கீகாரத்துடன் யாழ் மாவட்ட செயலகத்தின் ஊடக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் விநாயகர் விளையாட்டுக்கழகம் என்ற பெயரில் JD/VSW/290 என்ற பதிவு இலக்கத்தில் பதிவுசெய்யப்பட்டது.

விநாயகர் விளையாட்டுக்கழகமானது 1990ம் ஆண்டளவில் உருவாகப்பட்டு அண்மைக் காலங்களில் மாதகலில் சிறந்த  விளையாட்டு வீரர்களைகளினை  உருவாக்கும் விளையாட்டுக்கழகமாக உருவெடுத்து வந்துள்ளது. 1990ம் ஆண்டளவில் விநாயகர் விளையாட்டுக்கழகம் என்கிற பெயரால் அன்றைய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கழகம் 1990-1996 காலப்பகுதிகளில் உள்நாட்டுயுத்தம் மற்றும் இடப்பெயர்வுகள் காரணமாக செயலிழந்துபோனது. எனினும் 1997ம் ஆண்டு மீள்குடியமர்ந்த  எம்மவரினால் மீண்டும் விநாயகர் கழகம் புத்துயிர் பெற்றது. 1997ம் ஆண்டு நிர்வாகசபை உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டு கழகம் புத்துணர்வுடன் செயற்பட ஆரம்பித்தபோது

எம்கழகம் 1997ம் ஆண்டளவில் இயங்க ஆரம்பித்திருந்த போதிலும் உள்ளக விளையாட்டுகளையே அக் காலப்பகுதியில் முக்கியத்துவப்படுத்தபட்டிருந்தது. எனினும் கிரிக்கட் மற்றும் கரப்பந்து போன்ற விளையாட்டுக்கள் 1998 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு சண்டிலிப்பாய் பிரதேச சபையால் வருடம் தோறும் நடாத்தப்படும் கிரிக்கட் மற்றும் கரப்பந்து போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்றுவருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.. இக்காலப்பகுதியில் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு பின்பகுதியில் உள்ள பகுதியிலேயே பயிற்சிகளை மேற்கொண்டனர்.2001ம் ஆண்டளவில் மீண்டும் எமது கரப்பந்து மற்றும் கிரிக்கட் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு பிள்ளையார் கோயில் பின்பகுதியில் உள்ள பகுதியே உபயோகப்படுத்தப்பட்டது.



2001ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டுவரை கிரிக்கட்(வலது) கரப்பந்து(இடது) பயிற்சியை மேற்கொண்ட மைதானத்தின் தற்போதய புகைப்படம்.

பின் சில மைதான குறைபாடுகள் காரணமாக 2002ம் ஆண்டளவில் விக்கினேஸ்வரா பாடசாலையின் உட்புறமே எம்பயிற்சிகளை மேற்கொள்ளும் மைதானமாக மாற்றம் பெற்றது.


2002ம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டுவரை கிரிக்கட் பயிற்சியை மேற்கொண்ட மைதானத்தின் தற்போதய புகைப்படம்.

எனினும் அவ்மைதான வசதிகள் எமக்கு போதாமையால் வேறு மைதானம் தேடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டோம்.

2012 April மாதத்தில் மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூகநிலையமும் இணைந்து நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டோம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எம் கழக வீரர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட புகைப்படங்கள்.



2012 May மாத்தில் இளவாலையில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் நூலிழையில் வெற்றியை மல்லாகம் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்திடம் பறிகொடுத்திருந்தோம்.


2012 வருடம் ஆகஸ்ட் மாத இறுதியில் மாதகல் மயில்வாகனபுலவர் வாசகர் சாலையில் இடம் பெற்ற டெங்கு சம்பந்தமான கருத்தரங்குடன் இணைந்த கரப்பந்து கண்காட்சிப்போட்டியில் வெற்றியீட்டிய எம் கரப்பந்தாட்ட அணி வீரர்கள் வெற்றிக்கிண்ணத்துடன்


காந்திஜி விளையாட்டுக் கழகம் 2012 December இல் நடத்திய சுனாமி ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் சென். விளையாட்டுக்கழகத்தினை 29 ஓட்டங்களால் வெற்றி கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது எம் விநாயகர் விளையாட்டுக்கழகம். அன்றைய போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன், அதிரடி ஆட்ட்ம் போன்றவற்றிக்கு குவிக்கப்பட்ட கிண்ணங்கள்






2013 April மாதம் நடைபெற்ற சிறுவர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டின் இறுதிப்போட்டியில் phenix காந்தியி விளையாடுக்களகத்தை வெற்றிகொண்டு சாம்பியன் பட்டத்தை விநாயகர் சிறுவர் அணியான இளந்தளிர் வென்றது..இறுதி போட்டியின்போது phenix காந்தியி விளையாடுக்களகதவருடன் எம் வீரர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்


2013 இல் மாதகலில் 18 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த விநாயகர் விளையாட்டுக்கழக வீரர்கள் கிண்ணத்துடன்


எம்நிர்வாக பிரதிநிதிகளின் முயற்சியால் 2005ம் ஆண்டளவில் காளி கோவிலுற்கு முன்னுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை குத்தகை மூலம் பெறப்பட்டு அச்சமயம் எம் கழகத்திலிருந்த வீரர்களின் அயராத உழைப்பினால் மைதானமாக மாற்றம்பெற்றது . இத்தகைய பணிக்கு எம் வீரர்களின் உட்கட்டமைப்பு மாற்றத்திற்கு பெரும் தொகை பணம் செலவிடப்பட்டது.

mathagalvsc.com

Aucun commentaire:

Enregistrer un commentaire