ஆளுமை:சரோஜினிதேவி, கனகரத்தினம்
| பெயர் | சரோஜினிதேவி |
| தந்தை | கணபதிப்பிள்ளை |
| தாய் | பாக்கியம் |
| பிறப்பு | 1949.06.08 |
| ஊர் | யாழ்ப்பாணம் |
| வகை | எழுத்தாளர் |
சரோஜினிதேவி, கனகரத்தினம் (1949.0608) யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் பாக்கியம். ஆரம்பக் கல்வியை மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் இடைநிலை , உயர்நிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றார். கனிஷ்டபல்கலைக்கழக பலாலியில் பயிற்றப்பட்ட ஆசியரான இவர் விவசாய விஞ்ஞான ஆசிரியராவார். பல பாடசாலைகளில் ஆசிரியராக சில்லாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவராவார். இவர் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்றுள்ளார். கட்டுரை, கதை, பாடல்கள், கவிதை, வாழ்த்து மடல் ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் சரோஜினிதேவி. இவரின் ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் இனிய நந்தவனம், தமிழ் அன்னை ஆகிய சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. சாரணிய தேசிய பயற்றுனர் சபையின் அங்கத்தவராக இருப்பதுடன் விரிவுரையாராகவும் உள்ளார். ஈழத் தமிழர் வரலாறு என்ற தலைப்பிலான இவரின் நூல், வெளியீடு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதுடன் சாரணியம் தொடர்பிலான ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலும் வெளியீடு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. அத்துடன் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். குறிப்பாக படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு படிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் வரும் வகையில் உளவள ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
விருதுகள்
கவிதை எழுதி பாடியமைக்காக 2017ஆம் ஆண்டு மும்பாயில் விருது.
இவரின் கவிதைக்காக பர்மாவில் இனிய நந்தவனம் வழங்கிய விருது.
தேசிய மேன்மை விருது இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சினால் இரு தடவை வழங்கப்பட்டது.
குறிப்பு : மேற்படி பதிவு சரோஜினிதேவி, கனகரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
ஆளுமை:செல்வரத்தினம், குமாரசாமி
| பெயர் | செல்வரத்தினம் |
| தந்தை | குமாரசாமி |
| பிறப்பு | 1943.06.21 |
| ஊர் | மாதகல் |
| வகை | எழுத்தாளர் |
செல்வரத்தினம், குமாரசாமி (1943.06.21 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குமாரசாமி. இவர் டொமினிக் ஜீவா, வ. கந்தசாமி போன்றோரிடம் கல்வியைப் பயின்றார். இவர் பசி, மனிதனா நீ ஆகிய சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வாரமலர்களிலும் மல்லிகைப் புத்தகங்களிலும் வெளிவந்துள்ளன. இவருக்கு நகைச்சுவைச் செல்வர் என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 27
ஆளுமை:அகஸ்ரின், சூசை
பெயர் அகஸ்ரின் தந்தை சூசை பிறப்பு 1948.02.27 ஊர் மாதகல் வகை கலைஞர் அகஸ்ரின், சூசை (1948.02.27 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசை. தந்தையின் வழிகாட்டலில் ஆர்மோனியத்தையும் கலைவேந்தன் பிரான்சிஸ் வழிகாட்டலில் நாட்டுக்கூத்தையும் கற்று 1975 முதல் கலைத்துறையில் ஈடுபட்டுள்ளார்.
இவர் நாட்டுக்கூத்துக்கள், சிந்துநடைக் கூத்துக்கள் போன்றவற்றிற்கு ஆர்மோனியம் இசைத்தல், நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்றனவற்றுடன் இளைய தலைமுறைக் கலைஞர்களை இசை, நாடகம் போன்ற கலைகளில் உருவாக்கியுள்ளார். இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞான கேசரி' பட்டமும் (2001) திருமுறைக்கலாமன்றத்தின் 'அண்ணாவியார்' பட்டமும் (2007) பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 121
ஆளுமை:துரைராசா, இராசசிங்கம்
பெயர் துரைராசா தந்தை இராசசிங்கம் பிறப்பு 1952.11.13 ஊர் மாதகல் வகை எழுத்தாளர் துரைராசா, இராசசிங்கம் (1952.11.13 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசசிங்கம். இவர் முருகேசு சின்னத்தம்பி, குமாரசாமி செல்வரத்தினம், நடராசா நாகராஜா போன்றோரிடம் கல்வி பயின்றார்.
1983 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்த இவர், பாடசாலை காலத்திலிருந்தே நாடகம் நடித்தல், பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றுதல், கவிதைகள் புனைதல், ஆண்டு மலர்களிற்குக் கவிதைகள், ஆக்கங்கள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததோடு பிரதேச செயலகக் கலாச்சார விழாக்களில் தனது நாடகங்களை எழுத்துருவாக்கம் செய்து நெறியாள்கை செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் -32-33
ஆளுமை:கந்தையா, பொன்னம்பலம் (காந்தி ஐயா)
பெயர் கந்தையா தந்தை பொன்னம்பலம் தாய் நன்னிப்பிள்ளை பிறப்பு 1918.12.19 ஊர் மாதகல் வகை ஆசிரியர் கந்தையா, பொன்னம்பலம் (1918.12.19 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் நன்னிப்பிள்ளை. இவர் நுணசை முருகமூர்த்தி வித்தியாசாலையிலும் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாசாலையிலும் கல்வி கற்று, சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், ஆசிரிய தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து வன்னியிலும் திருகோணமலையிலும் பணியாற்றினார்.
சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர், தமது நாற்பத்து நான்காவது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் காந்தியக் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தமையால் காந்தி ஐயா என அழைக்கப்பட்டார். அகில இலங்கைக் காந்திசேவா சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4413 பக்கங்கள் 55-61
- நூலக எண்: 13385 பக்கங்கள் 03-05
ஆளுமை:சூசைப்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை
பெயர் சூசைப்பிள்ளை தந்தை வஸ்தியாம்பிள்ளை பிறப்பு 1877 இறப்பு 1955 ஊர் மாதகல் வகை எழுத்தாளர் சூசைப்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை (1877 - 1955) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை. கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தவரான இவர், யாழ்ப்பாணம் அர்ச். சூசைமாமுனிவர் அச்சகத்தில் நீண்டகாலமாகக் கடமையாற்றினார். சங்கிலியன் நாடகம், எத்தாகியார் நாடகம், கருங்குயிற் குன்றத்துக் கொலை நாடகம் முதலியன இவராற் பாடப்பட்ட நாடக நூல்களாகும். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினால் மதுரகவிப் புலவர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 132
- நூலக எண்: 15417 பக்கங்கள் 142-143
ஆளுமை:சிற்றம்பலப் புலவர்
பெயர் சிற்றம்பலப் புலவர் பிறப்பு ஊர் மாதகல் வகை புலவர் சிற்றம்பலப் புலவர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவிலுள்ள வேதாரணியத்துக்குச் சென்று பஞ்சலக்கண கணபதி ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். இருபாலைச் சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை ஆகியோர் இவரிடம் கல்வி கற்றவர்கள் என அறியக்கிடக்கின்றது. இவர் கண்டி மன்னன் மீது கிள்ளைவிடு தூது என்னும் பிரபந்தமொன்றை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 21
- நூலக எண்: 963 பக்கங்கள் 119
ஆளுமை:ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார்
பெயர் ஏரம்பையர் தந்தை சுப்பிரமணிய சாத்திரியார் பிறப்பு 1847.02.29 இறப்பு 1914.01.08 ஊர் மாதகல் வகை எழுத்தாளர் ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார் (1847.02.29 - 1914.01.08) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரியார். இவர் தந்தையாரிடம் ஆரம்பக் கல்வியையும் தமிழ், வடமொழியையும் சிறிது காலம் கற்றதுடன் சங்கானை வேலுப்பிள்ளை ஆசிரியர், நல்லூர்ச் சம்பந்தப் புலவர், நீர்வேலி சங்கர பண்டிதர், ஆறுமுகநாவலர், ஆகியோரிடம் தமிழிலக்கியம், இலக்கணங்கள், சித்தாந்த நூல்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றைக் கற்றார்.
இவர் பல நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கத்ரேசரூஞ்சல், நகுலாசல புராணம் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். வடமொழி நூல்களையும், நீதி சாஸ்திர நூல்களையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தார். பல தனிப் பாடல்களையும் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரமும் பாடியுள்ளார். இவர் கீரிமலையில் த. கைலாசபிள்ளை ஆரம்பித்த சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி தமிழும் சமஸ்கிருதமும் மாணவர்களுக்குக் கற்பித்தார்.
நிர்வாண தீட்சை பெற்ற இவர், வண்ணார்பண்ணையில் தொடங்கப்பெற்ற சைவபரிபாலன சபைக்கு சைவப் பிரசாகராகவும் ஆறுமுகநாவலர் வண்ணையில் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகவும் விளங்கினார். இவர் சைவப் பிரசங்கங்களை ஊர்கள் தோறும் செய்தார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 266
- நூலக எண்: 963 பக்கங்கள் 51-53
- நூலக எண்: 3003 பக்கங்கள் 118-122
- நூலக எண்: 15417 பக்கங்கள் 49-56
ஆளுமை:அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர்
பெயர் அருணாசல ஐயர் தந்தை அப்பாசாமி ஐயர் பிறப்பு ஊர் மாதகல் வகை புலவர் அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அப்பாசாமி ஐயர். இவர் கவிபாடுவதில் சிறந்தவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 229
ஆளுமை:அருணாசலப்பிள்ளை
பெயர் அருணாசலப்பிள்ளை பிறப்பு ஊர் அராலி வகை புலவர் அருணாசலப்பிள்ளை யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவர் மாதகல் சிற்றம்பலப்புலவரிடத்தில் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு காரிகை என்னும் இலக்கண நூலிலும் சிறந்த அறிவுடையவராகத் திகழ்ந்தார். சோதிடநூலிலும் இவர் வல்லவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 211
ஆளுமை:கந்தப்பிள்ளை, பரமானந்தர்
பெயர் கந்தப்பிள்ளை தந்தை பரமானந்தர் தாய் உலகாத்தையார் அம்மையார் பிறப்பு 1766 இறப்பு 1842.06.02 ஊர் நல்லூர் வகை புலவர் கந்தப்பிள்ளை, பரமானந்தர் (1766 - 1842.06.02) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர், வைத்தியர், நாடகாசிரியர். இவரது தந்தை பரமானந்தர்; தாய் உலகாத்தையார் அம்மையார். இளமைக்காலத்தில் சண்முகச் சட்டம்பியாரிடம் பயின்ற இவர், கூழாங்கைத்தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்களையும் மாதகல் மயில்வாகனப் புலவர், இருபாலைச் சேனாதிராசமுதலியார் ஆகியோரிடமும் கற்றுப் புலமையாளரானார். ஆங்கிலம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்த இவர், பதினெட்டு ஆண்டுகள் அரச சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சிக் கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.
இவர் சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், நீக்கிலாஸ் நாடகம், இரத்தினவல்லி விலாசம் உட்பட இருபத்தொரு நாடகங்கள் வரையில் பாடியுள்ளார். இரத்தினவல்லி விலாசம் என்னும் நூலினை ஆறுமுகநாவலர் பாடிமுடித்தார் என அறியக்கிடக்கிறது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 158
- நூலக எண்: 3003 பக்கங்கள் 208-210
- நூலக எண்: 7571 பக்கங்கள் 02
- நூலக எண்: 963 பக்கங்கள் 65
- நூலக எண்: 11601 பக்கங்கள் 132-136
ஆளுமை:கைலாசபிள்ளை, தம்பு
பெயர் கைலாசபிள்ளை தந்தை தம்பு பிறப்பு ஊர் நல்லூர் வகை எழுத்தாளர் கைலாசபிள்ளை, தம்பு யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பு. ஆறுமுக நாவலரால் வண்ணார்பண்ணையில் தாபிக்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையில் இளமைக் கல்வியை பயின்றார். இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமைபெற்றிருந்தார்.
சைவப்பிரகாச வித்தியாசாலையில் அதிபராகப் பணியாற்றிய இவர், அப்பாடசாலையை நிலைக்களமாகக் கொண்டு சுன்னாகம் குமாரசாமிப்புலவர், மாதகல் ஏரம்புப்புலவர், மானிப்பாய் முத்துத்தம்பிப்பிள்ளை, மாதகல் அருணாசலஐயர், நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர், ஊரெழு சரவணமுத்துப்புலவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்ச்சங்கம் ஒன்றை அமைத்துத் திறப்பட நடாத்தினார். இச்சங்கம் மதுரைத் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.
'இந்துசாதனம்' பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிவஞானசித்தியார் - சுபக்கம் - இவரால் ஆராயப்பட்டுத் திருத்தமான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாவலரின் வாழ்க்கை வரலாற்றினை விரிவாக எழுதி ஆறுமுகநாவலர் சரித்திரம் என வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 200-203
- நூலக எண்: 963 பக்கங்கள் 96-98
ஆளுமை:சின்னக்குட்டிப்புலவர்
பெயர் சின்னக்குட்டிப்புலவர் பிறப்பு ஊர் மாவிட்டபுரம் வகை புலவர் சின்னக்குட்டிப்புலவர் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த புலவர். மாதகல் சிற்றம்பலப் புலவரிடம் கல்வி பயின்ற இவர், தெல்லிப்பளையிலிருந்த கனக தண்டிகைக் கனகராய முதலியார் மேல் கனக தண்டிகைக் கனகராயன் பள்ளு பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 125
- நூலக எண்: 3003 பக்கங்கள் 217
- நூலக எண்: 963 பக்கங்கள் 120
மாவை சின்னக்குட்டி புலவர்
ஒல்லாந்தர் காலத்தவர். தண்டிகை கனகராஜ முதலியார் என்னும் பிரபுமேல் “தண்டிகை கனகராஜன் பள்ளு” (1792) என்னும் இலக்கியத்தை பாடினார். இந் நூலில் சைவ மக்களின் மங்கள வாழ்வை சிறப்பித்து கூறுகிறார்.
ஆளுமை:குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை
பெயர் குலசபாநாதன் தந்தை குலசேகரம்பிள்ளை பிறப்பு ஊர் கரம்பன் வகை புலவர் குலசபாநாதன், குலசேகரம்பிள்ளை வேலணை, கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் மாதகல் மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை நூலினைப் பல அடிக்குறிப்புக்களுடன் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டவர். ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் கடமையாற்றிய இவர், நயினை, நல்லூர் தல வரலாறுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார். தனது குலதெய்வமான வேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகங்களும் பாடினார்.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 08
ஆளுமை:ஆறுமுகம், சி.
பெயர் ஆறுமுகம் பிறப்பு ஊர் புங்குடுதீவு வகை ஆசிரியர், சொற்பொழிவாளர் ஆறுமுகம், சி. புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், சொற்பொழிவாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு தமிழ்த்துறைப் பேராசிரியாக விளங்கிய இவர், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும், எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணியாற்றினார். புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவராக இருந்து சமயப் பணியாற்றினார்.
இயல்பாகவே கவிதை எழுதும் ஆற்றல் படைத்த இவர், பாடசாலைக் கீதங்கள் முதல் ஆலய ஊஞ்சற்பாக்கள் வரை பல கவிதைகளை எழுதியுள்ளார். 'நல்லூரான் நாற்பது' என்னும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர், மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' என்னும் சஞ்சிகையை நடாத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10145 பக்கங்கள் 81-83
ஆளுமை:ஜெகசோதி, ஏ. எம். சி.
பெயர் ஏ.எம்.சி.ஜெகசோதி தந்தை அன்ரனி குறூஸ் தாய் இதயநாயகி அற்புதம் பிறப்பு இறப்பு - ஊர் யாழ்ப்பாணம் வகை கலைஞர் ஏ.எம்.சி.ஜெகசோதி, அன்ரனி தெகிவளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை அன்ரனி; தாய் இதயநாயகி அற்புதம். நாடக, வில்லுப்பாட்டு கலைஞரான ஏ.எம்.சி.ஜெகசோதி,இவர் மாதகல் புனித தோமஸ் பெண்கள் பாடசாலையிலும் இளவாலை கன்னியர் மடத்திலும் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும் இளவாளை புனித ஹென்றி அரசர் கல்லூரியிலும் தனது கல்வியைக் கற்றார். இவரின் சொந்த இடம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் தனது வசிப்பிடமாக தெகிவளையைக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே நகைச்சுவையாக வீட்டில் கதைத்து தனது சகோதரர்களுடன் நடிப்பதை தனது வழக்கமாகக் கொண்டிருந்த இவர் தனது சகோதரன் ஜெயபாலனே தான் இந்த நாடகத்துறைக்கு வருவதற்கு காரணமென சொல்கிறார். இவரின் சகோதரர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். ஜெயபாலன் 1982ஆம் ஆண்டு இறந்தது தன்னை மிகவும் பாதித்தாக சொல்லும் இவர் , 1980ஆம் ஆண்டு வானொலிக் கலைஞராக தன்னை கலைத்துறையில் இணைந்துக் கொண்டுள்ளார். ஏ.எம்.சி.ஜெகசோதி வானொலி நாடகக் கலைஞராக இருந்து மேடை நாடக கலைஞராக 1982ஆம் ஆண்டு பிரவேசித்து, 1982ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடக கலைஞராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். அத்தோடு 2004ஆம் ஆண்டு சோக்கல்லோ சண்முகம் அவர்கள் மூலமாக வில்லுப்பாட்டு கலைஞராகவும் அறிமுகப்படுத்தப்பட்டு அத்துறையிலும் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார். கலைத்துறையில் பன்முகத் திறமைகளைக்கொண்ட ஜெகசோதி யாழ்ப்பாண மொழியை சரியாக உச்சரிப்பாகக் கொண்டுள்ளதால் இவரின் நகைச்சுவை நாடகங்களில் யாழ்ப்பாண வட்டார வழக்கு மிகவும் தெளிவாகவும் நகைச்சுவை உணர்வுடனும் மக்களை கவரும் வகையில் வெளிப்படுத்தி தனக்கென ஒர் இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளார். ஐந்து வருடங்களாக வானொலியில் ஒலிபரப்பான முகத்தார் வீடு இவரை மிகவும் பிரபலப்படுத்திய நாடகமாகும். இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் பெற்ற நாடகமான கோமாளிகள் நாடகமும் தான் நாடகத்துறையில் பிரபலமாக காரணமென தெரிவிக்கிறார். பெரும்பாலான தமிழ் விளம்பரங்களில் இவரின் பின்னணிக் குரலை நாம் கேட்கக்கூடியதாக இருக்கும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வானொலி, மேடை, தொலைக்காட்சி நாடகங்களில் ஏ.எம்.சி.ஜெகசோதி அவர்கள் நடித்துள்ளார். "அகதிச் சிறுவனுக்கு அட்மிசன்" எனும் நாடகத்தில் நடித்தமைக்காக இவருக்கு 2001-2002ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு சிறந்த வானொலி நாடகக் கலைஞருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. தனது கலைத்துறையுடன் தொடர்புடையதாக சுவிஸ்சர்லாந்து, நோர்வே, டென்மார்க், ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சென்றுவந்துள்ளதாக தெரிவிக்கிறார் கலைஞர் ஏ.எம்.சி.ஜெகசோதி. இலங்கை நாடகத்துறையிலும் வில்லுப்பாட்டுத் துறையிலும் மிகவும் குறைந்தளவிலான பெண்களின் பங்களிப்பையே நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஏ.எம்.சி.ஜெகசோதி இத்துறைகளில் தனக்கான தனியான இடத்தை பிடித்துள்ளார்.
குறிப்பு : மேற்படி பதிவு ஏ.எம்.சி.ஜெகசோதி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
ஆளுமை:கலைவாணி, இராஜகுமாரன்
பெயர் கலைவாணி தந்தை செல்வரட்ணம் தாய் சிவபாக்கியம் பிறப்பு 1966.08.14 இறப்பு - ஊர் யாழ்ப்பாணம்-மாதகல் வகை எழுத்தாளர் கலைவாணி, இராஜகுமாரன் (1966.08.15) திருகோணமலை, அன்புவழிபுரத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வரட்ணம்; தாய் சிவபாக்கியம். தந்தையின் வேலை இடமாற்றங்கள் காரணமாக முதலாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையான காலப்பகுதிக்குள் பதினொரு பாடசாலைகளில் கல்விகற்றுள்ளதாக தெரிவிக்கிறார். கலைவாணி என்னும் இயற்பெயரை கொண்ட இவர் தமிழ்நதி என்னும் புனைபெயரினாலேயே அனைவராலும் அறியப்படுகிறார். உயர்தரத்தில் திருகோணமலை ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் கல்விகற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டத்தாரியாவார். எழுத்துத்துறைக்கு 1986ஆம் ஆண்டு பிரவேசித்ததாக கூறுகிறார். 1986ஆம் ஆண்டு கவிதை எழுதத் தொடங்கினாலும் 1996ஆம் ஆண்டு இவரின் ஆக்கங்கள் அச்சிப் பதிப்பாக வெளியாகியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் தமிழ்நதி.
பெற்ற விருதுகள்:
1.அமுதன் அடிகளார் இலக்கிய விருது (பார்த்தீனியம் நாவலுக்காக, 2016) 2.இயக்குநர் மணிவண்ணன் விருது (பார்த்தீனியம் நாவலுக்காக, 2016) 3.அவள் விகடன் ‘இலக்கிய ஆளுமை’விருது, 2017 4.படைப்பூக்க விருது (எஸ்.ஆர்.வி.பள்ளி. திருச்சி, 2018)
குறிப்பு : மேற்படி பதிவு கலைவாணி, இராஜகுமாரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
படைப்புகள்
- சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள்)
- நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது (சிறுகதைகள்)
- ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்)
- கானல் வரி (குறுநாவல்)
- இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
- அதன்பிறகும் எஞ்சும் (கவிதைகள்)
- பார்த்தீனியம் (நாவல்)
- மாயக்குதிரை (சிறுகதைகள்)
வளங்கள்
- நூலக எண்: 2233 பக்கங்கள் 28
- நூலக எண்: 2261 பக்கங்கள் 28
- நூலக எண்: 2278 பக்கங்கள் 20
- நூலக எண்: 8333 பக்கங்கள் 36
- நூலக எண்: 9997 பக்கங்கள் 26
- நூலக எண்: 10332 பக்கங்கள் 33-36
- நூலக எண்: 15463 பக்கங்கள் 23
- நூலக எண்: 15467 பக்கங்கள் 58-62
- நூலக எண்: 15470 பக்கங்கள் 16-19
வெளி இணைப்புக்கள்
தமிழ்நதி (கலைவாணி இராஜகுமாரன்) பிறப்பு திருகோணமலை தேசியம் இலங்கைத் தமிழர் கல்வி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர் வலைத்தளம் http://tamilnathy.blogspot.com/ கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.
வெளிவந்த நூல்கள்[தொகு]
- நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
- சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், ஓகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்)[1]
- இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)[2]
- கானல் வரி (குறுநாவல்)[3]
- ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்)[4][5]
- பார்த்தீனியம் (நாவல், 2016)[6]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தேவமைந்தன் (19 பிப்ரவரி 2010). "சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்". கீற்று. பார்த்த நாள் 22 மே 2016, {{{accessyear}}}.
- ↑ ச. விசயலட்சுமி (19 மார்ச் 2010). "ஈரவாசனையில் துடிக்கும் துயர்". கீற்று. பார்த்த நாள் 22 மே 2016, {{{accessyear}}}.
- ↑ "கானல் வரி - Kanal Vari". நூல் உலகம். பார்த்த நாள் 22 மே 2016, {{{accessyear}}}.
- ↑ "ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்". காலச்சுவடு பதிப்பகம். பார்த்த நாள் 22 மே 2016, {{{accessyear}}}.
- ↑ டி. அருள் எழிலன். "என்ன எழுதினாங்க?". குங்குமம். பார்த்த நாள்: 22 மே 2016.
- ↑ "சென்னை புத்தக கண்காட்சி". தினமணி (9 சூன் 2016). பார்த்த நாள் 10 சூன் 2016, {{{accessyear}}}.
ஆளுமை:சாரதாதேவி, சிறிஸ்கந்தராசா
பெயர் சாராதேவி தந்தை விநாயகராஜா தாய் நேசம்மா பிறப்பு 1950.07.14 ஊர் மாதகல் வகை எழுத்தாளர், கலைஞர் சாரதாதேவி, சிறிஸ்கந்தராசா யாழ்ப்பாணம் மாதகலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை விநாயகராஜா; தாய் நேசம்மா. ஆரம்பக்கல்வியை மாதகல் விக்னேஸ்வரா மகாவி்த்தியாலயத்திலும் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும் கற்றார். ஏரம்பு சுப்பையா பிள்ளை , செல்வி குமாரசுவாமி திரிபுரசுந்தரி ஆகியோரிடம் முறையாக நடனத்தைப் பயின்று பின்னர் இந்தியா சென்று பரதசூடாமணி அடையார் கே.லக்ஷ்மணனிடம் பரதநாட்டியம், நட்டுவாங்கத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.
1972ஆம் ஆண்டு வீரசிங்கம் மண்டபத்தில் அமரர் அடையார் கே.லக்ஸ்மன் அவர்களின் நட்டுவாங்கத்துடன் இவரது நடனம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியையும் இவர் முடித்துள்ளார். சகுந்தலை என்ற நாட்டிய நாடகத்தை தயாரித்துள்ளதுடன் நட்டுவாங்கமும் வழங்கியுள்ளார் அத்துடன் அன்னம் விடு தூது நாட்டிய நாடகத்திற்கு நெறியாளராகவும் நெறிப்படுத்தியுள்ளார். ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு பாடசாலைகள் மூலமாக பல நடன நிகழ்ச்சிகைளை வழங்கியுள்ளார்.
1980ஆம் ஆண்டு திருகோணேஸ்வரர் நாட்டியக் கலாமன்றத்தினை ஆரம்பித்தார். இதன் ஸ்தாபகரும் இவரேயாவார். வட இலங்கை சங்கீத சபை ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து மாணவிகளுக்கு பரீட்சைகள் நடாத்தியுள்ளார். மாணவர்களுக்காக நடனம் -1, நடனம் -2 ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
திருகோணமலை சுப்பர் சங்கீத இசைக்கழகம் 30 வருட கலைப்பணியை பாராட்டி கௌரவித்து பாராட்டும் சான்றிதழும் 2004ஆம் ஆண்டு வழங்கியது.
அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர்களால் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் கலைஞர்கள் கௌரவிப்பு விழாவில் கௌரவிப்பு.
கலைப்பண்பாட்டுக் கழகம் நடாத்திய இசை, நடன, நாடக விழாவில் ”நாட்டிய வித்தகி” விருது.
சக்தி தொலைக்காட்சியின் ”நாட்டிய வித்தகி” என்ற வாழ்நாள் விருதும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் 2009. அரச விருது விழாவில் பரதநாட்டியத்திற்காக கலாபூஷண விருது 2012ஆம் ஆண்டு.
நாட்டியத்துறையில் 34 ஆண்டு சேவையை பாராட்டி நகர முதல்வர் விருதும் சான்றிதழும் கௌரவிப்பும் 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2013ஆம் ஆண்டு நடனத்துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி வித்தகர் விருது.
2015ஆம் ஆண்டு அரச நடன விழாவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையில் நாட்டிய நாடகக் கலையை மிளிரச் செய்வதற்கு சேவையாற்றியமைக்காக ”நடனத் திலகம்” விருதும் ”நாட்டிய வாரிதி” விருதும் வழங்கப்பட்டது.
குறிப்பு : மேற்படி பதிவு சாரதாதேவி, சிறிஸ்கந்தராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
- நூலக எண்: 10145 பக்கங்கள் 81-83
- நூலக எண்: 4253 பக்கங்கள் 08
- நூலக எண்: 3003 பக்கங்கள் 211
- நூலக எண்: 3003 பக்கங்கள் 229
- நூலக எண்: 15444 பக்கங்கள் -32-33
- நூலக எண்: 15444 பக்கங்கள் 121