திரு.அருள்சுப்பிரமணியம் அவா்களின் மறைவுக்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்..!

0 comments


 தமிழ் மொழி பற்றாளா் அமரா்

                  திரு.அருள்சுப்பிரமணியம் அவா்களின்  
         மறைவுக்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தின்
                                   ஆழ்ந்த இரங்கல்
======================================

     பெருமதிப்பிற்குரிய அமரா் திரு. அருள்சுப்பிரமணியம்
     அவா்கள் கனடா தமிழ் பூங்கா, அறிவகம் ஆகியவற்றின்
     நிறுவுனா் ஆவார்.தமிழ் மொழியை ஆழமாக நேசித்த
     ஓர் உன்னத மனிதராக விளங்கியவா் அமரா் புலம்  
     பெயா்ந்து கனடா நாட்டில் வாழ்ந்தாலும் அங்கு தமிழ்
     பூங்கா தமிழ் மொழி பாடசாலையை நிறுவியதன் மூலம்
     புலம் பெயா் தேசமெங்கும் வாழும் தமிழ் சிறார்களுக்கும்
     இளம் தலைமுறையினருக்கும் தமிழ்மொழிகற்றலுக்கான
     அடித்தளத்தை ஏற்படுத்தி தமிழா்கள் மனதில் நீங்காத
     இடம் பிடித்த ஓர் சிறந்த வழிகாட்டியாக விளங்கிய
     தமிழீழம் தந்த ஒப்பற்ற மனிதராவார்.
              "ஓர் இனத்தின் தேசிய அடையாளம்
               அந்த இனத்தின் மொழியாகும்"
     இவைதான் ஈழ தேசியம் கற்பித்த கற்பிதங்கள்.

     காலத்தின் சுழற்சியோடு ஒன்றிணைந்து வாழ்வதுதான்
     வாழ்க்கை என்றில்லாது! எம் தேசத்தின் மொழிக்காகவும்
     ஒன்றிணைந்து வாழ்ந்தவா் அமரா்.அருள்சுப்பிரமணியம்
     அவா்கள். இயற்கை ஓர் நல்ல தமிழ் பற்றாளனை காவு
     கொண்டுள்ளது. ஒரு மனிதனுடைய வாழ்வு என்பது
     அவா்கள் வாழ்ந்த காலப்பகுதியிலும் மறைந்த பின்பும்
     அதே கனதியுடன் நினைவு கூறப்படுகின்றது என்றால்  
     அவா்கள் தான் சார்ந்த மொழியையும்,மண்ணையும்
     நேசித்தமையாகும்.எனவே தமிழா் வாழ்வியல்
     வரலாற்றில் என்றும் இவரது பெயா் நீக்கமற
     நிறைந்திருக்கும்.
                           எனவே அமரா்.திரு. அருள் சுப்பிரமணியம்
     அவா்களுக்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கம் ஆழ்ந்த
     அஞ்சலியையும்,இரங்கலையும் தெரிவிப்பதுடன்  
     அன்னாரின் பிரிவால் ஆழ்ந்த துயரதில் உள்ள அவா்
     மனைவி,பிள்ளைகள்,உறவினா்கள்,நண்பா்கள்,தமிழ்
     மொழி உணா்வாளர்கள், தமிழ் பூங்கா பாடசாலை
     ஆசிரியா்கள்,மாணவா்கள் அனைத்துஉறவுகளுக்கும்
     ஆழ்ந்த அனுதாபத்தையும், அன்னாரின் ஆத்மா
     சாந்தியடைய வேண்டி எமது இறுதி வணக்கத்தை
     தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
                                                  இலங்கை தமிழ் சங்கம்
                                                               தலைவா்
                                                   நடராசா.இராசேந்திரா
                                                            அமெரிக்கா.

Aucun commentaire:

Enregistrer un commentaire