கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியில் மாதகல் நலன்புரிச் சங்க அனுசரணையுடன் மாதகல் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான கொரோனா கால உலர் உணவு வழங்கல் நிகழ்வுகள்.
''வருமைப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு கை கொடுப்போம்"
30.10.2021 சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு மாதகல் கிளை 01 ப.நோ.கூ. சங்கத்தில் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு.மா.ஜெறாட் தலைமையில் இடம்பெற்றது. மங்கல விளக்கினை மாதகல் கிழக்கு J/150 கிராம அலுவலர் திரு.பொப்பிளர், மாதகல் நலன்புரிச் சங்க தலைவர் ஓய்வு நிலை கோட்ட கல்வி அதிகாரி திரு.வி.சிற்றம்பலம் மாதகல் நலன்புரிச் சங்க பொருளாளர் சென் ஜோசப் ம.வி அதிபர் திரு.யோ.எ.பங்கிராஸ்,ப.நோ.கூ சங்கம் சார்பான பிரதிநிதி திரு.செல்வகுமார், மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாகசபை உறுப்பினர்களான திருமதி கோமதி, திரு சபாரட்ணம் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய நிர்வாக உறுப்பினர் திரு தயாபரன் பயனாளிகள் சார்பாக வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் ஆகியோர் ஏற்றிவைத்தனர். நிகழ்வின் விடயம் சார்ந்த உரைகளை மாதகல் நலன்புரிச் சங்க தலைவர் மற்றும் மாதகல் கிழக்கு J/150 கிராம அலுவலர் ஆகியோர் நிகழ்த்தினர். மாதகல் நலன்புரிச் சங்கத்தினுடாக கிராம அலுவலகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு பெறப்பட்ட 600 குடும்பங்களுக்கு குறித்த நாளிலே கிளை(1), கிளை (2), கிளை (3) ப.நோ.கூ. சங்கங்கள் ஊடாக உணவுகளும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இறிதியில் மாதகல் நலன்புரிச் சங்க பொருளாளர் திரு.யோ.பங்கிராஸ் அவர்களின் நன்றியுரையுடன் வறுமை பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு கை கொடுப்போம் என்ற நோக்கிலான உலர் உணவு வழங்கல் நிகழ்வு இனிதே முடிவுற்றதும் குறிப்பிடத்தக்கது.