பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக, மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் மாணவர்களின் பாவனைக்கென நவீன முறையில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறை"..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக, மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் மாணவர்களின் பாவனைக்கென நவீன முறையில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறை [SMART CLASSE ROOM]" வியாழன் 25-11-2021 அன்று வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு பொ. ரவிச்சந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.


மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, இந்த நவீன முறையிலான அறையினை அமைக்க, எமது சங்கம்  4,65,000[நான்கு இலட்சத்து அறுபத்தையாயிரம்] ரூபாவினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக மாதகல் விக்னேஸ்வரா பாடசாலைக்கு வழங்கி உள்ளோம்.  

இந்த நிகழ்வில் செல்வி இ. சுலோச்சனா [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபர்], திரு பொ. ரவிச்சந்திரன் அவர்கள்[வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்],  திரு இ. சஞ்சீவன்-சீலன் அவர்கள் [பொறியியலாளரும், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும்], திரு ஆ. வாசன் அவர்கள்[தொழில்நுட்ப உத்தியோகத்தர்], திரு அ.சிற்றம்பலம் அவர்கள் [இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர்], திரு செ. சுபாஸ்கரன்- சுபாஸ் [இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினதும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினதும் நிர்வாக உறுப்பினர்], மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.











































 

Aucun commentaire:

Enregistrer un commentaire