மாதகலில் மீண்டும் மாசி முரல் மீன் வரத்தொடங்கியுள்ளது என்பதை நுகர்வோருக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம், காணொளி…

0 comments
முரல் திருவிழா. மாதகல் ஊருக்கு. மட்டும் தனித்துவமானது பாருங்கோ...
வருசா வருசம் மாசி மாத சீசன்ல பின்னேரம் 6 மணிக்கு மாதகல் கடற்கரை பக்கம் திருவிழா மாதிரி சனம் நிக்கும்.
எல்லாம் இந்த முரல் மீனுக்குத்தான். மீனவர்கள் boatல போய் பிடிச்சிட்டு வருவாங்க. உயிரோட துடிச்சுட்டு இருக்கும். Demandஐ பொறுத்து ஒரு மீன் 20 இருந்து 80 வரை விலை போகும். ஒரு பை நிறைய வாங்கி வந்து செதில் தட்டி, தலையை வெட்டி, குடலை உருவி, கழுவி கொஞ்சம் எடுத்து மசாலா போட்டு வறுவல் செய்வம்.
மிச்சத்தை நல்ல தேங்காய் பால்ல சொதி வைச்சு இறக்கின பிறகு நிறைய தேசிப்புளி விடுவம்.
ஏற்கனவே ரெடியா இருக்கிற வெள்ளை புட்டோட அல்லது வெள்ளை சோற்றோட சொதியும், வறுவலும் வச்சு சாப்பிட்டா. அதுவும் தனியா சாப்பிடாமல் அயல் வீட்டுல இருக்கிறவங்களை எல்லாம் கூப்பிட்டு சேர்ந்து சாப்பிடுற சந்தோசம் இருக்கே, அது எவ்ளோ பெரிய Hotelல சாப்பிட்டாலும் கிடைக்காது.




 தலைப்பு

முரல் மீன் உண்டகளைப்பு



புரட்டாதி இரவில தேறைமீன் விளைகின்ற
மாதகல் கடலில மாசியில முரல்மீனாம்
கரையோரம் வேண்டக் காத்துநின்ற வேளையில
கன்றாவிக் கிறுக்கர் வடித்தாராம் ஆசிரியப்பா!
அதிலும் இணைக்குறள் ஆசிரியப்பா அதுவாம்!


"மாசியில் இரவில் மாதகல் கடல்முரல்
சம்பில் தொட்டுமே
வலித்தூண் டல்வரை
கரையில் காத்துநின் றுவேண்டி
வீட்டில பொரியல் பால்சொதி
சுவைக்கப் பிட்டுடன் சுடச்சுட விழுங்கவே!"


கிறுக்கர் கிறுக்கிய இணைக்குறள் ஆசிரியப்பா
படித்து முடிப்பதற்குள் முரல் நிறைந்த ஓடம்
கரையைத் தட்ட காத்து நின்றோர் பார்க்க
கரைக்கேறிய ஓடத்தில வலையால தட்டின முரலை
வேண்டி வந்துத் தின்ற சுவையில - நானும்
வயிறு முட்ட விழுங்கிப் போட்டுக் கிடக்கையிலே
விடியவே வீட்டுக் கூரை வழியாகப்
பகலவனார் சுட்டுத்தான் எழுப்பினார் என்றால்
உளக்கண்ணால் புரிந்திருப்பீர் நானுமொரு ஏழையென்றே!
Kasi Jeevalingam Yarlpavanan

Aucun commentaire:

Enregistrer un commentaire