மாதகல் நுணசை வீதி J/152 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி குடும்பத்தினருக்கு கனடா மாதகல் மக்களின் முதன்மை நிதியுதவியுடனும்..!

0 comments

மாதகல் நுணசை வீதி J/152 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி குடும்பத்தினருக்கு கனடா மாதகல் மக்களின் முதன்மை நிதியுதவியுடனும் சன்டிலிப்பாய் பிரதேச செயல நிதியுதவியுடனும், நீர்த்தாங்கி குளியலறை, மின்சார வசதிகளுடனும் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு 23.03.2023 அன்று  உதயகுமார் தர்ஷினி குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

வீடு கட்டி முடிக்க கடுமையாக பாடுபட்ட நேரில் வந்து பார்த்தும் கனடாவில் நிதி சேகரித்து அனுப்பினவர்களும் ஆகிய தயாபரன் (பரன்), நகுலேந்திரன் (ரகு) அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இவ் நிகழ்வில் மாதகல் விவசாய சம்மேளனத் தலைவர் திரு.தவராசா, மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் திரு. அருள்ஞானந்தன், J/152 கிராம சேவையாளர் சுஜீபன், J/152 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அனுசியா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். வீடு கட்டி முடிக்க நிதியுதவி செய்த அனைவருக்கும் மாதகல் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
























































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire