மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள்..!

0 comments
 யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலைக்கு 24/03/2023 வெள்ளிக்கிழமை அன்று மேலைதேயவாத்தியக் (Band instrument) கொள்வனவு செய்வதற்காக ரூபா 200.000 வினை அன்பளிப்பாக பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்துள்ளார்.
இவரது இச் சேவைதனைப் பாராட்டி யா/ மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலை சமுகத்தினர் நன்றிகளை கூறி நிற்கின்றனர்.
புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் தான் தவழ்ந்த மண்ணில் பற்றுக் கொண்டு இன்னல் படும் வேளைதனில் தேடிச்சென்று தனி ஒரு மனிதனாய் உதவிக்கரம் கொடுக்கும் எம் மண்ணின் தேசப்பற்றாளன்
பூபாலசிங்கம்.அன்பழகன் அவர்கட்கு  நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.








 

Aucun commentaire:

Enregistrer un commentaire