மாதகல் சமூக சுகாதார நிலையம் திறந்து வைப்பு~2023
மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி K. சன் சுந்தர் அவர்களின் நிதி பங்களிப்பிலும்
வழிகாட்டலும் மற்றும் ஆலோசனைக்கமைவாகவும் மாதகல் சமூக சுகாதார நிலையம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தோலிக்க,இந்து மதத் தலைவர்களின் நல்லாசியுடன் பிறந்து வைக்கப்பட்டது Dr.T. ரசில்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ் கிருஷ்ணகுமார் (இலங்கைக்கான பணிப்பாளர்) International Madical Health organization (I M H O) திரு வி சிற்றம்பலம் (ஆலோசகர்) மற்றும் கல்வியலாளர்கள் மாதகல் இளைஞர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதிப்பிற்குரிய Dr.சன் சுந்தர் அவர்களின் எண்ணக் கருவில் உருவான குறித்த மாதகல் சமூக சுகாதார நிலையத்தின் ஊடாக எதிர்காலத்தில் மாதகல் மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் திட்டங்கள் அவரது ஆலோசனைக்கு அமைவாக நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















































