மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக மாதகல் நுணசை முருகன் ஆன்மீக அறக்கட்டளையால்..!

0 comments
மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக மாதகல் நுணசை முருகன் ஆன்மீக அறக்கட்டளையால் அமெரிக்கா ஆன்மீக அறக்கட்டளை போசகர் ஞானசின்னய்யாவின் ஏற்பாட்டில் சண்சுந்தர் (அமெரிக்கா) முத்துலிங்கம் (கனடா) ஆகியோரின் நிதி யுதவியில் மாதகலைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த 07 மாணவர்களுக்கு கற்றலுக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்தும் அவர்களுக்கான நிதியுதவி வழங்கப்படும்.
இந் நிகழ்வனதுமாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத் தலைவர் சா.அருள் ஞானானந்தன் தலைமையில் 26.09.2023 அன்று மாலை 03:00 மணியளவில் நுணசை முருகன் கோவில் முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நுணசை முருகன் ஆலய தர்மகத்தா புருஷோத்மன், மற்றும் கிராம சேவையாளர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நிதியினை வழங்கிவைத்தனர்.
புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் எம் கிராமத்தின் அபிவிருத்திக்கும் மாணவர்களின் கற்றலுக்கும் செய்துவரும் இவர்களது இச் சேவைதனை பாராட்டுவதோடு  நன்றிகளையும்  கூறி நிற்கின்றோம். 














 

Aucun commentaire:

Enregistrer un commentaire