திருமதி மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி

0 comments
திருமதி மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி
பாசமுள்ள எங்கள் அப்பாம்மா
இன் முகத்துடன் அனைவரையும் கவர்ந்து
எமக்கெல்லாம் அன்புடன் நல்வழி காட்டி
பிரகாசமான ஒளிவிளக்காக இருந்து
வழியெங்கும் நிழலாய் நின்றீர்களே!!!
அன்பின் அரவணைப்பை
உங்களிடம் கண்டோம்
எம் வளர்ச்சிக்கு வழி காட்டி விட்டு
எம்மை தனிமையில் தவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்?????
கண்ணியமாக நாம் வாழ கல்வி
தான் முக்கியம் என்று
கண்ணாக எம்மை போற்றி புத்திமதிகள்
பல கூறி அன்புதனை தேனாக பொழிந்தீர்கள்
உங்கள் சிரிப்பு உங்கள் கனிவான பேச்சு உங்கள் பார்வை இவற்றை இனி
எப்போது காண்போம்???
உங்கள் புன்சிரிப்பு போகவில்லை
புன்னகையோ மறையவில்லை
எம்மை துயரடைய வைத்து விட்டு சென்றீரோ!!
இனி யார் எமக்குத்துணை
என்றென்றும் உங்கள் நினைவால்
உருகுது எம் மனம்
உங்களை பிரிந்து தவிக்கின்றோம்
இந்த தரணியில் ஆண்டுகள் பல கடந்தாலும்
மறவோம் உம் நினைவை!!!
பேரப்பிள்ளைகள்
ஜாதவன்,ஜாவண்ணியா

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, வவுனியா கற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி அவர்கள் 23.11.2019 சனிக்கிழமையன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் - செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா - மனோன்மணி தம்பதிகளின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற கந்தையா புண்ணியமூர்த்தியின் அன்பு மனைவியும், தர்மராஜன் (பொறியியலாளர், கனடா), ஆனந்தராஜன் (கணக்காளர், Mount Breeze Hotel - கொழும்பு), இந்திராணி (வவுனியா), ஜெயராஜன் (மென்பொருள் பொறியியலாளர், லண்டன்), ரவிராஜன் (சிரேஷ்ட பேராசிரியர். பௌதிகவியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், நற்குணசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, தனலட்சுமி (ஆஸ்திரேலியா), நாகராஜா, மகேந்திர ராஜா, தனபாலசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி (கனடா), தயாளினி (ஆசிரியர் - அல ஹீகமா கல்லூரி, கொழும்பு - 12), காலஞ்சென்ற ஸ்ரீகணேஷ் (இளைப்பாறிய சிரேஷ்ட உதவி முகாமையாளர், ஸ்ரீலங்கா ரெலிக்கொம், வவுனியா), ஞானகுமாரி (சாந்தி - லண்டன்), வாசுகி (ஆசிரியர், யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், கஜானி, சரண்யா , ஜாதவன், ஜாவன்னியா, பிரசாந்தினி, தர்சிகா, கீர்த்தனா, சாள்ஸ், ஆகாஷ், சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், சிவபாக்கியம், தவமணி, துரைசிங்கம், காலஞ்சென்ற இராமசாமி, புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.11.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், 92. கற்குழி, வவுனியா இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் பிற்பகல் 3 மணியளவில் இறம்பைக்குளம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர். 

பு.ஆனந்தராஜன்-0711840657,

பு.ரவிராஜன்-0718561715

Aucun commentaire:

Enregistrer un commentaire