கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் j/150, j/151, j/152 ஆகிய கிராம சேவையாளரால்..!

0 comments

2ம் கட்டம் நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சூழ்நிலையை அடுத்து மாதகல் வறிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டும் 2ம் கட்டமாக கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் j/150, j/151, j/152 ஆகிய கிராம சேவையாளரால் எமக்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியல் மூலம் 120 மேற்பட்ட குடும்பங்களுக்கு சிறு அளவிலான அத்தியாவசிய சாமான்கள் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டன. பொருட்கள் வழங்கும் போது கிராமசேவையாளர் j/150 திரு.ஜேம்ஸ் பொப்ளர் மற்றும் j/151 திரு.விக்னபவன், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் தலைவர் திரு.கனகலிங்கம் ஆகியோரும் எம்முடன் வந்து பொருட்கள் வழங்கி வைத்தார்கள், மற்றும் எமக்கு பொருட்கள் கொள்வனவு செய்து பொதி செய்து மக்களுக்கு வழங்கி வைக்க பல வழிகளிலும் உதவி புரிந்த மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கும் கனடா மாதகல் நலன்புரிச் முன்னேற்ற ஒன்றியத்தின் தலைவர்  அவர்களுக்கும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்க செயலாளர் திரு.குகரவிந்திரன் அவர்களுக்கும் மற்றும் மயூரதாஸ், கோகில்ராஜ், குகந்தன், கௌரி ஆகியோருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.







































Aucun commentaire:

Enregistrer un commentaire