மாதகல்/ சென்.தோமஸ் பெண்கள் பாடசாலையின் பௌதீகவள பற்றாக்குறை பற்றி அங்கஜன் ஆய்வு..!!
மாதகல்/ சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்றைய தினம் (24) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மேற்கொண்டார்.
மாதகல் பகுதிக்கு இன்று நிகழ்வு ஒன்றுக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை சமூகத்தின் விஷேட அழைப்பின் பேரில் பாடசாலை சுற்றாடல் நிலமைகளை அறிவதற்காக பாடசாலை தீடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அப் பாடசாலையில் பௌதீக வளப்பற்றாக்குறைகள் பற்றி அறிந்து கொண்டார்.
அப் பாடசாலை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்ற போதும் பாடசாலையில் பௌதீக வளங்கள் குறைவாகவே காணப்படுவதாக அப் பாடசாலை அதிபர் அங்கஜன் இராமநாதனுக்கு சுட்டிக்காட்டிதேவைப்பாடுகள் பற்றிய கோரிக்கை கடிதம் ஒன்று அங்கஜன் இராமநாதனுக்கு கையளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோ்கள், அப் பகுதி மக்கள் உடனிருந்தனர்.

நன்றி : யாழ் News
2011-2017 நூலகம் இணையத்தில் இருந்து=>