பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்க நிதியுதவியில் மாதகல் பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தில் பணிபுரியும் பணியாளருக்கு வழங்குவதற்கான கொடுப்பனவு நிதி ரூபா (ஐம்பதாயிரம் )50,000/= 29/03/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகல் நலன்புரிச்சங்க கட்டடத் தொகுதியில் நடைபெற்ற மாதகல் நலன்புரிச்சங்க நிர்வாகசபைச் சந்திப்பில் வைத்து மாதகல் நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.வி சிற்றம்பலம், செயலாளர் திரு.மா ஜெறாட் முன்னிலையில் மாதகல் நலன்புரிச்சங்க உறுப்பினரால் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கப் பொருளாளர் திரு. சுபாஸ்கரன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
மாதகல் பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தினை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் 2015ஆம் ஆண்டு மாசி மாதம் முதல் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினூடாக நடாத்தி வருகின்றது.
மாதகல் கிராமத்தில் வசிக்கும் மாணவச் செல்வங்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயரிய எண்ணத்திலேயே இச்சிறுவர் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.




